தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்த வடிவேலு, அதன்பிறகான நிகழ்வுகளால் மனம் நொந்து போனார்.இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்ட நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது.
இருப்பினும் சமூக வலைதளத்தில் இன்றும் மீம் மன்னனாக திகழ்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் வடிவேலு லிப் லாக் கொடுக்கும் இந்த மீம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக கவுண்டமணி செந்தில் நடிகர்களாக இருக்கும் படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக வரும் நடிகைகள் அந்த படத்தின் நாயகி ரேஞ்சுக்கு இருப்பார்கள். அதன் பின்னர் கவுண்டமணி பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அதே போல ஆரம்பத்தில் கவுண்டமணி செந்தில் படங்களில் காமெடியனாக நடித்த வடிவேலு பின்னர் தனியாக படங்களில் காமெடி நடிகனாக ஜொலித்தார்.
இதையும் பாருங்க : PSBB விவாகரத்தில் குரல் கொடுத்த விஷாலை அசிங்கப்படுத்திய காயத்ரி- கேள்வி கேட்ட நடிகர். சப்பக்கட்டு கட்டிய காயத்ரி.
லீட் காமெடியன் ஆனதும் கவுண்டமணியின் ரூட்டை பாலோ செய்த வடிவேலு கவுண்டமணி போல தன்னுடைய படங்களிலும் பெண் காமெடியன்களை வைத்து காமெடி செய்ய துவங்கினார். அந்த கோவை சரளா – வடிவேலு ஜோடியை இன்னமும் நம்மால் மறக்க முடியாது. அதே போல வடிவேலு தனது காமெடியில் நடித்த நடிகைகளை ரொமான்ஸும் செய்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் வடிவேலு இந்த நடிகைக்கு லிப் லாக் கொடுத்த மீம் ஒன்று படு வைரலாக பரவி வருகிறது. இந்த நடிகை வேறு யாரும் இல்லை , இவர் பல படங்களில் டான்சராக வந்துள்ளார். தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த ‘நெருப்பு கூத்தடிக்குது’ பாடலில் கூட இவர் ஆடி இருப்பார்.