தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். தமிழ் சினிமா உலகில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை கொடுப்பதில் மிஷ்கின் கைதேர்ந்தவர். அதுவும் இவருடைய படங்கள் எல்லாம் திர்ல்லர், ஆக்ஷன் போன்ற பாணியில் தான் இருக்கும். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் அவர்கள் சிம்புவை வைத்து இயக்கும் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவையும் இணைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மிஸ்கின் அவர்கள் சிம்புவை சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். அதற்கு சிம்புவுக்கும் ஓகே சொல்லி நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : ‘ஒரு செகன்ட்ல சில்க் ஸ்மிதானு நெனச்சிட்ட’ தண்ணீரில் நந்திதா நடத்திய போட்டோ ஷூட்.
அதோடு மாநாடு படத்தை முடித்துவிட்டு தான் மிஷ்கின் படத்தில் சிம்பு நடிப்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் படத்துக்காக செலவிட்ட ரூ.10 கோடியை வடிவேலு நஷ்ட ஈடாக கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் எழுந்தது.
பின் தயாரிப்பாளர் சங்கத்தினர் ஷங்கர் படத்தை நடித்து முடித்த பின் தான் வடிவேலு மற்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஆனால், அதை வடிவேலு ஏற்க மறுத்து விட்டார். இதனால் தான் வடிவேலு சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் தான் சிம்பு படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க பல முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் வடிவேலுக்கு எதிரான தடை நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.