குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது நடிகை நந்திதா தான். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டாகாத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்க்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நந்திதா.
ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படம் மூலம் தான். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பெரும் பிரபலமடைந்தார். இந்த படத்திற்கு பின்னர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : ஒரு அண்ணன் காதல் தோல்வியில், ஒரு அண்ணன் விபத்தில்- ரோட்டில் வேலை செய்து வாங்கிய சம்பளம் – ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் இவர் தண்ணீரில் நடித்திய போட்டோ ஷூட்களில் இருந்து சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர் ஒருவர் ‘ஒரு செகன்ட்ல சில்க் ஸ்மிதானு நெனச்சிட்ட’என்று கமன்ட் செய்து உள்ளார்.
தற்போது இவர் புது முக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் இவர், அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை 8 கிலோ குறைத்துள்ளாராம். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகுந்த சவாலாகவும், வித்யாசமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் வசந்த், எம் எஸ் பாஸ்கர் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்களாம்.