வடிவேலு ஹீரோவாக நடிக்க இருந்த படத்தில் விஜய் நடித்து ஹிட்டான படம் எது தெரியமா ?

0
5598
vadivelu
- Advertisement -

விஜய்-சிம்ரன் நடித்து 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் துள்ளாத மனமும் துள்ளும். அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் காதல் படங்களில் நடித்தார் விஜய் அதில் இந்த படமும் ஒன்று. இந்த படத்தை இயக்குனர் ‘எழில்’ எழுதி இயக்கினார்.

-விளம்பரம்-

Thulladha-Manamum-Thullum

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மையை கூறியுள்ளார் இயக்குனர் எழில். இந்த கதை முதலில் வடிவேலுவை மனதில் வைத்து எழுதப்பட்டது. அவருக்கு கச்சிதமாக கதை எழுதி தயாரிப்பாளரை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர், நடிகர் முரளிக்கு ஏற்றவாறு கதையை மாற்றி எழுதி தயாரிப்பாளரை தேடினேன். அவருக்கும் கிடைக்கவில்லை.

பின்னர் கடைசியாக விஜய்யிடம் சென்று இந்த கதையை கூறினேன். அவர் கதையை கேட்டவுடன் ”ஓகே இது சூப்பர் கதை சார்..” என கூறிவிட்டார். பின்னர் அவருக்கு ஏற்றவாறு ஆக்சன், காமெடி என அனைத்தையும் மாற்றி எழுதினேன். படமும் செம்ம ஹிட் ஆகிவிட்டது

-விளம்பரம்-

vijay

எனக் கூறினார் இயக்குனர் எழில். விஜயின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் ஒரு திருப்புமுனையை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement