பொங்கலுக்கு ஊர் திரும்பும் போது பாஸ்ஸில் ஏற்பட்ட கொடுமை – உதயநிதியை tag செய்து புலம்பிய அர்ச்சனா.

0
511
- Advertisement -

விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது.

-விளம்பரம்-

ராஜா ராணி சீரியல் :

தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். மேலும், இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தின் மூலம் விஜே அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் சமீபத்தில் இவர் ராஜா ராணி தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில் இவர் நடித்து வந்த கதாபாத்திரத்தை நடிக்க வந்தவர் தான் அர்ச்சனா குமார்.

- Advertisement -

அர்ச்சனா குமார் :

இவர் சென்னையை சேர்ந்தவர், ஜீ டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார். இந்த நிகழ்ச்சியில் இவர்க்கு பிரபலம் கிடைக்கவே தொடர்ந்து விஜய் டிவியில் ஈரமான ரோஜா, பொன்மகள் வந்தால் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். இவர் ஈரமான ரோஜா சீரியலில் நடிக்கும் போது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து.

மேலும் ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் ராஜா ராணி சிரியலில் நடித்து வந்த அர்ச்சனா விலகவே அர்ச்சனா குமாருக்கு வாய்ப்பு கிடைத்து. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய வில்லத்தனமான நடிப்பினால் கலக்கி வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா குமார் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அர்ச்சனா தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

Busல் நடந்தது :

அதாவது அர்ச்சனா சமீபத்தில் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு செல்வதற்கு National Travels பஸ் ஒன்றில் சென்றிருக்கின்றனர். அதற்க்காக Single Seater பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் அமரும் இருக்கை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அந்த இருக்கையில் யாருமே அமரமுடியாமல் பூச்சிகள் வருவதாகவும் கூறினார். மேலும் இது குறித்து ஓட்டுநர் மற்றும் கண்ணாணிப்பாளரிடம் கேட்டதற்கு இதற்கும் எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

பொறுப்பில்லாமல் விளக்கம் கூறிய நிர்வாகம் :

மேலும் பேசிய அர்ச்சனா பொங்கல் நேரத்தில் இருக்கைகள் குறைவாக இருப்பதை தான் புரிந்து கொள்வதகாவும். ஆனால் அதற்காக பாதுகாப்பே இல்லாத இந்த இருக்கையை இங்கே வைத்திருப்பது குறித்து கேட்டதற்கு தாங்கள் இதற்கும் சேர்த்துதான் அரசாங்கத்திற்கு வரி கட்டுகிறோம் என்று கூறியுள்ளனர் அந்த நிர்வாகம். மேலும் இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது சரியான விளக்கம் இல்லை.

உதயநிதியுடன் கோரிக்கை :

இந்த இடத்தில் உங்களால் தூங்கமுடியுமா என்ற கேட்டதற்கு நான் தூங்கிக்கொள்கிறேன் என்று நிர்வாகத்தில் உள்ள கண்காணிப்பாளர் கூறியதாக சீரியல் நடிகை அர்ச்சனா அந்த பதிவில்கூறியுள்ளார். மேலும் இது குறித்து திமுக இளைஞர் அணி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரிடம் இந்த பேருந்து நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்து அவரை டேக் செய்தும் பதிவியுட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement