கோமா, தற்கொலை செய்ய முயன்ற பெண்களை மீட்ட வடிவேலு காமெடி- அவரே சொன்ன ஆச்சரிய தகவல்

0
92
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். இவர் டி ராஜேந்தர் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் படத்திலும் நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு. இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார்.

- Advertisement -

வடிவேலு திரைப்பயணம்:

கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வடிவேலு கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான ஒரு சில வாரத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் வடிவேலு வந்தவுடன் நிகழ்ச்சி இன்னும் கலகப்பாகி விட்டது.

நிகழ்ச்சியில் வடிவேலு சொன்னது:

மேலும், இந்த நிகழ்ச்சியில் வடிவேலு, ஒரு 11 வயது சிறுமி கோமாவில் இருந்தார். டாக்டர் அந்த சிறுமி பெற்றோரிடம், உங்க பெண்ணுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், எங்களுடைய மகளுக்கு வடிவேலு காமெடி என்றால் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறார். உடனே அந்த காமெடி காட்சிகளை மருத்துவர் போட சொல்லி இருக்கிறார். பெற்றோர்களும் அதே போல் வடிவேலுவின் காமெடி காட்சிகளை காண்பித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கோமா சென்ற சிறுமி:

அந்த காட்சிகளை பார்த்ததுமே அந்த சிறுமி கோமாவில் இருந்து மீண்டு வந்துவிட்டார். அதற்குப் பின் அந்த சிறுமி குணமடைந்த பிறகு அந்த சிறுமியின் உடைய பெற்றோர் என்னை சந்தித்து நன்றியும் தெரிவித்தார்கள். இதைவிட என்ன வேண்டும். அதேபோல் ஒரு பெண்ணுடைய கணவர் திட்டிவிட்டார் என்று கோபத்தில் தூக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்ய அந்த பெண் முயன்றார். அப்போது அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். ஆனால், அவர் கையில் அந்த கயிறை சுருட்டி வைத்துக் கொண்டு டிவி பார்த்து சிரித்து இருக்கிறார்.

தற்கொலை செய்ய முயன்ற பெண்:

பின் போலீஸ் வந்து விசாரித்த போது அந்தப் பெண், சாகலாம் என்று பார்த்தேன். ஆனால், வடிவேலு வந்து கெடுத்துவிட்டார். டிவியில் வடிவேலு உடைய காமெடி ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததுமே என்னுடைய தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டேன் என்று அந்தப் பெண் கூறினார். உடனே போலீஸ் அதிகாரி என்னுடைய நம்பரை வாங்கி போன் செய்தது நடந்தது எல்லாம் கூறினார். நானும் அந்த பெண்ணிடம் பேசினேன். அப்போது அந்த பெண், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செத்திருப்பேன் சார். நீங்கதான் என்னை காப்பாற்றி விட்டீர்கள் என்று சிரித்துக் கொண்டே சென்றார். அதற்குப் பின் நான், இதுபோன்று செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறினேன்.

Advertisement