நாய்களை கண்டுகொள்ளாமல் விட்டால் அதுவே ஓடி விடும் – Metto சர்ச்சை குறித்து முதன் முறையாக வாய் திறந்த வைரமுத்து.

0
443
- Advertisement -

தன் மீது வரும் தொடர் விமர்சனங்களுக்கு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பதில் அளித்திருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். மேலும், இவர் இதுவரை 5800 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.

-விளம்பரம்-
இவரோட இசையில் பாடல் எழுதுவது தான் எனக்கு கடினம்..! வைரமுத்து - Tamil Behind  Talkies

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். பாடகி சின்மயி கூறி இருந்த குற்றச்சாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு “வீழ மாட்டோம்” ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தார். அப்போது வைரமுத்து சார்பாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்:

இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து வருகின்றனர். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார்.

chinmayi

கவிஞர் வைரமுத்து குறித்து வரும் விமர்சனங்கள்:

இதனால் கவிஞர் வைரமுத்து குறித்து பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தன் மீது வரும் விமர்சனங்களுக்கு கவிஞர் வைரமுத்து அளித்து உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே கவிஞர் வைரமுத்து அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அரிதாக தான் தோன்றுவார். ஆனால், பொது நிகழ்ச்சிகளில் அவரை அதிகம் பார்க்க முடியும். அந்த வகையில் சமீபத்தில் வைரமுத்து அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

-விளம்பரம்-

கவிஞர் வைரமுத்து அளித்த பேட்டி:

அதில் அவர் மீது பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வரும் விமர்சனத்திற்கு பதில் அளித்திருக்கிறார். அதிலும் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அவர் மீது இதுவரை சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வைரமுத்துவும் இது குறித்து எதுவுமே பேசவில்லை. இந்த நிலையில் முதன்முறையாக பேட்டியில் வைரமுத்து மனம் திறந்து கூறி இருப்பது, உங்களை துரத்தும் நாயை கண்டுகொள்ளாமலே செல்ல வேண்டும். இல்லை என்றால் அது உங்களைத் துரத்திக் கொண்டே வரும்.

Vairamuthu out of Mani Ratnam's Ponniyin Selvan

சின்மயி குறித்து வைரமுத்து கூறியது:

விமர்சனங்கள் மீது பதில் சொல்ல ஆரம்பித்தால் நாயோடு போராடுவதிலேயே வாழ்க்கை போய்விடும். நாயைக் கண்டு கொள்ளாமல் ஓடிக் கொண்டே இருங்கள். நாய்கள் புறம் திரும்பி ஓடிவிடும். மேலும், காதலால் தான் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். எனக்குத் தாய், காதலி எல்லாமே என் மனைவி தான் என்று வைரமுத்து கூறியிருக்கிறார். இதன் மூலம் இவர் நேரடியாக சின்மயியை சொல்லவில்லை என்றாலும் அவர் அழுத்தமாக அதைத்தான் பதிவு செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement