முதலில் உங்க பிள்ளைகளுக்கு இப்படி செய்வதை நிறுத்துங்கள் – இந்தி மொழி சர்ச்சை குறித்து வைரமுத்து.

0
253
vairamuthu
- Advertisement -

குழந்தைகளுக்கு வேற்று மொழியில் பெயர் வைக்க கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார் அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 5800 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருக்கின்றனர். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று பலரும் சந்தேகித்தும் வருகின்றனர்.

- Advertisement -

விஐடி பல்கலைக்கழகம் விழா:

அதுமட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார். இதனால் கவிஞர் வைரமுத்து குறித்து பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் விழா ஒன்றில் கவிஞர் வைரமுத்து அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் தமிழ் இயக்கம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் வைரமுத்து கூறியது:

இதில் பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கூறியிருப்பது, வடநாட்டு கலைஞர்கள் இந்தி தான் தேசிய மொழி என்று கூறி இருக்கின்றனர். அவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இந்தி பேசுபவர்கள் மட்டும் தான் இந்தியா என்றால் இந்தி உங்கள் தேசிய மொழியாக இருந்து விட்டுப் போகட்டும். இது பன்முக கலாச்சாரமும், பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய கொண்ட தேசம்.

குழந்தைகளுக்கு வேறு மொழி பெயர் வைக்க கூடாது:

இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றோ, பொது மொழி என்றோ பொதுவெளியில் இந்தக் கருத்தை யாரும் முன் வைக்கக் கூடாது. இந்தியா முழுவதும் தாய்மொழி என்ற உணர்வு கொழுந்து விட்டு எரிவதற்கு முழு காரணமும் தமிழர்கள். நாம் அனைவரும் குழந்தைகளுக்கு இருளாண்டி, ஒச்சாயி போன்ற அழகிய தமிழ் பெயர்கள் சூட்ட வேண்டும். அஜய் தேவ்கான், தேஜாஸ்ரீ போன்ற வேற்று மொழி பெயர் சூட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement