சிம்புவின் தாய், தந்தை மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் – யார் கொடுத்துள்ளது பாருங்க

0
1070
Simbu
- Advertisement -

சிம்புவின் தாய், தந்தை மீது பிரபல தயாரிப்பாளர் புகார் அளித்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிம்பு திகழ்ந்து வருகிறார். அதே நேரத்தில் சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகன் என்று இவரை சொல்வார்கள். இந்த நிலையில் சிம்பு குடும்பம் மீது தற்போது புகார் எழுந்துள்ளது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் சிம்பு நடித்து இருந்தார். இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். மேலும், இந்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிம்புவின் தாய், தந்தை மீது மைக்கேல் ராயப்பன் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்த திரைப்படம் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் திடீரென்று ஒருநாள் சிம்பு என்னை அழைத்து இந்த படத்தை வெளியிடுங்கள். ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் நான் ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்து தருகிறேன் என்று எனக்கு உறுதியளித்தார்.

இதையும் பாருங்க : ராஜா ராணியில் இருந்து ஆல்யா விலகப் போகிறாரா ? சஞ்சீவ் கூறிய பதிலால் ரசிகர்கள் சந்தேகம்.

- Advertisement -

எனவே நானும் அந்த படத்தை வெளியிட்டேன். பின் படம் சரியாக ஓடாததால் எனக்கு 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின்னர் என்னால் அடுத்த திரைப்படம் தயாரிக்க முடியவில்லை. சிம்பு தனக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றும் நோக்கத்தில் இருந்தாள். இது குறித்து நான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன். அப்போது தலைவராக இருந்த விஷால் மற்றும் நிர்வாகிகள் பலமுறை விசாரித்து விரைவில் திரைப்படம் நடித்துத்தர வேண்டும் என்று சிம்புவிடம் உறுதி வாங்கினார்கள்.

ஆனால், நிர்வாகம் மாறிய பின்னர் அதெல்லாம் முடியாது என்று சிம்பு இப்போது வரை இழுத்துக் கொண்டே வருகிறார். இதனால் இந்த பிரச்சினையை உடனடியாக முடித்து எனக்கு நல்லதொரு முடிவை வழங்க வேண்டும். அதோடு எனக்கு ஆரம்பத்தில் இருந்து இன்று வரை பல வகையில் நஷ்டத்தை ஏற்படுத்திய சிம்பு மற்றும் அவரது தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement