அது வெறும் அரசாங்க விழா தான் மற்றுமொரு விடுமுறை நாள் தான்- சுதந்திர தினத்தில் வைரமுத்து பதிவு

0
230
- Advertisement -

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள். நம்முடைய இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான் சுதந்திரம் கிடைத்தது. இதனால் ஒவ்வொரு வருடமும் இந்த நாளை இந்தியா முழுவதுமே கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். இது 78 ஆவது சுதந்திர தினம்.

-விளம்பரம்-

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் தேசியக் கொடிகளை ஏற்றி, மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி வருகிறார்கள். மேலும், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சாதாரண மக்கள் என அனைவருமே இந்த நாளை கொண்டாடி சோசியல் மீடியாவில் பதிவு போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து சுதந்திர தினத்திற்கு பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர்,

- Advertisement -

வைரமுத்து கவிதை:

ஒரு சமயப் பண்டிகையின்
கொண்டாட்டக் கூறுகள்
ஒரு தேசியத் திருவிழாவுக்கு
ஏனில்லை?

நான் அறியாமலே
இந்தக் கொண்டாட்டம்
எனக்காகவும்தான் என்ற
உரிமைப்பாடு
ஏன் உணரப்படுவதில்லை?

-விளம்பரம்-

தேசத்தைத் தனி மனிதனும்
தனிமனிதனை தேசமும்
சுரண்டுவது ஓயும்வரை
142 கோடிக்கும்
சுதந்திரம்
பொதுவுடைமை ஆவதில்லை

அதுவரை

அது வெறும்
அரசாங்க விழாதான்
மற்றுமொரு
விடுமுறை நாள்தான்

நம்பிக்கையோடு
சொல்லிப் பழகுங்கள்
விடுதலைத் திருநாள்
வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.

வைரமுத்து குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. ‘நிழல்கள்’ என்னும் திரைப்படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் தான் வைரமுத்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார். இதுவரை வைரமுத்து அவர்கள் 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

vairamuthu

வைரமுத்து திரைப்பயணம் :

மேலும், இவர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதிலும், முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளையும் வைரமுத்து வாங்கி இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய துறையிலுமே ஆளுமை படைத்தவராக விளங்குகிறார்.

Advertisement