வலிமை ஷூட்டிங்கில் இருந்து வெளியேறிய நடிகர்கள் – காரணம் இது தானாம். இயக்குனர் எடுத்த முடிவு.

0
1253

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர்.

அவ்வளவு ஏன் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதையும் பாருங்க : ஹீரோவாவதற்கு முன்பாக ஜீவாவிற்கு டப்பிங் பேசியுள்ள சிவகார்த்திகேயன். இதான் அந்த வீடியோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1 ஆம் தேதி அதாவது அஜித்தின் 50 வது பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் அறிவித்தபடி அஜித் பிறந்தநாளுக்கு ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வராது என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமான செய்தியை கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து சில நடிகர்கள் விலகிவிட்டார்களாம். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பங்கேற்ற எச். வினோத், கடந்த ஆண்டு ’வலிமை’ படத்திற்காக ஒரு சில காட்சிகளை சீனியர் நடிகர்களை வைத்து படமாக்கினோம்., அதன் தொடர்ச்சியாக அந்த நடிகர்களை படப்பிடிப்பிற்கு அழைத்த போது அவர்கள் கொரோனா தொற்று பயம் காரணமாக படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று கூறிவிட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை வைத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement