பாலாவின் “வணங்கான்” படப்பிடிப்பில் பஞ்சாயத்து, துணை நடிகைக்கு பளார் – போலீசில் புகார்.

0
800
bala
- Advertisement -

பாலா இயக்கி வரும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் துணை நடிகை தாக்கப்பட்டிருப்பதாக போலீஸ் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

பொதுவாக படம் என்றால் ஹீரோ- ஆக்ஷன், ஹீரோயின் -அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மேலும், இவருடைய படத்தில் ஹீரோனா— ஆக்ஷன்,மாஸ்; ஹீரோயினினா– அழகாகவும்,வெள்ளையாகவும் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை.

- Advertisement -

பாலா திரைப்பயணம்:

படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. இவர் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” படத்தை தான் முதன் முதலாக இயக்கினார். இவர் இயக்கிய முதல் படத்திலேயே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். அதற்கு பிறகு இயக்குனர் பாலா அவர்கள் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.

வணங்கான் படம்:

பின் இடையில் இவர் சிறிது பிரேக் எடுத்து கொண்டார். தற்போது பாலா இயக்கி வரும் படம் வணங்கான். இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். அதேபோல் இந்த படத்தில் நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. பின் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தான் சூர்யா படத்தில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியானது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இது குறித்து இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். இதன்பின் வணங்கான் படப்பிடிப்பை முடிக்க தீவிரம் காட்டி வந்தார் பாலா. தற்போது இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜயையும், ஹீரோயின் கீர்த்தி செட்டிக்கு பதிலாக ரோஷினி பிரகாசும் நடிக்கிறார்கள் என்று அறிவித்திருந்தார்கள். தொடர்ந்து கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும், இந்த படத்திற்காக துணை நடிகர், நடிகைகளை கேரளாவில் இருந்து ஜிதின் என்ற ஒருங்கிணைப்பாளரால் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

புகார் அளித்த துணை நடிகை:

அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் லிண்டா. மொத்தம் மூன்று நாட்களுக்கு 9 துணை நடிகர், நடிகைகளுக்கு சம்பளமாக 22,600 கொடுக்க வேண்டும். ஆனால், ஜிதன் சொன்னபடி கொடுக்கவில்லை. இதனை கேட்க போன லிண்டாவை அவர் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் லிண்டாவின் கன்னத்தில் காயம் ஏற்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து கன்னியாகுமரி காவல் நிலையத்திலும் லிண்டா புகார் அளித்திருக்கிறார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement