வானத்தை போல சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் – யார் தெரியுமா ?

0
355
Vanathai
- Advertisement -

வானத்தைப்போல சீரியலில் இருந்து மீண்டும் பிரபல நடிகை திடீரென்று விலகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை. அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த தொடரில் கதாநாயகியாக துளசி ரோலில் ஸ்வேதா நடித்து இருந்தார். சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். பின் துளசி கதாபாத்திரத்தில் நடிகை மன்யா ஆனந்த் நடித்து வருகிறார். பின் சீரியலில் இருந்து ஸ்வேதாவை தொடர்ந்து சின்ராசுவாக நடித்து வந்த தமனும் விலகி விட்டார். அவருக்கு பதிலாக சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார்.

- Advertisement -

வானத்தைப்போல சீரியல்:

சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகர் ஸ்ரீகுமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களை தொடர்ந்து சீரியலில் இருந்து சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த சங்கரேஸ் விலகி இருந்தார். இவருக்கு பதிலாக சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் சந்தோஷ் நடிக்கிறார். பின் பொன்னி கதாபாத்திரத்தில் நடித்த பிரீத்தி சீரியலில் இருந்து விலகி விட்டார். இப்படி தொடர்ந்து வானத்தைப்போல சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகிக் கொண்டு இருந்தார்கள்.

சீரியல் குறித்த தகவல்:

இருந்தாலும், சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் சீரியலில் இருந்து சந்தியா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தேப்ஜானி விலகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜீப் சட்டர்ஜி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியாகியிருந்த நாக் அவுட் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் தேப்ஜானி அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சின்னத்திரைக்கு சென்றார்.

-விளம்பரம்-

தேப்ஜானி குறித்த தகவல்:

பின் இவர் முதன் முதலில் பெங்காலி சீரியலில் தான் நடித்தார். அதை தொடர்ந்து இவர் ராசாத்தி என்ற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது வானத்தைப்போல தொடரில் சந்தியா ரோலில் தேப்ஜானி நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று சீரியலில் இருந்து நடிகை தேப்ஜானி விலகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தேப்ஜானி பதிவு:

மேலும், இது குறித்து தேப்ஜானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது, என்னை நன்றாக நடத்திய அன்பான குழுவிற்கு நன்றி. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரை நான் இங்கு சந்தித்தேன். அவர்கள் என் நலம் விரும்பிகள். ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த், ஸ்வேதா கெல்கே மற்றும் சாந்தினி பிரகாஷ் ஆகியோருடன் பணிபுரிவதை நிச்சயமாக மிஸ் செய்வேன். ஆனால், நான் உங்களை மீண்டும் சந்திப்பேன். உங்கள் நட்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிஸ் யூ ஆல் என்று கூறி இருக்கிறார்.

Advertisement