இந்தியில் பேசாதீங்க பிளீஸ் – மேடையிலேயே மனைவியை எச்சரித்த இசைப்புயல். இதோ வீடியோ

0
657
- Advertisement -

விகடன் விருது விழாவில் தன் மனைவியிடம் தமிழில் பேச சொல்லி ஏ ஆர் ரகுமான் வற்புறுத்தி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் .

-விளம்பரம்-

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையமைத்து மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் ரகுமான். தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றும் படங்கள்:

தற்போது இவர் இசையில் பொன்னியின் செல்வன் 2 படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. அதனை அடுத்து இவர் “லாம் சலாம்” என்ற திரைபடத்தில் பாடல்களை இயக்குவதுதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார். இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கி வருகிறார். இப்படி ரகுமான் பல படங்களில் பிசியாக இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் விகடன் விருது விழாவில் மனைவியிடம் தமிழில் பேச சொல்லி ஏ ஆர் ரகுமான் வற்புறுத்தி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

-விளம்பரம்-

விகடன் விருது விழா:

அதாவது, 2020, 2021, 2022 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் கடந்த மார்ச் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் கமல், மணிரத்தினம், ரகுமான், சூர்யா, லோகேஷ் என திரை உலகினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், விழாவில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த பின்னணி பாடகருக்கான விருது மற்றும் கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு போன்ற படத்திற்கு 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர்களான விருது என்ற இரண்டு பிரிவுகளில் ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டிருந்தது. விருது வாங்கிய பிறகு ரகுமான், எல்லா புகழும் இறைவனுக்கே.

மனைவிக்கு ரகுமான் சொன்ன அறிவுரை:

இந்த விருதை என்னுடைய மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். என்னுடைய குரலின் முதல் ரசிகை என்னுடைய மனைவிதான். அவர்தான் என் குரல் நல்லா இருக்கு என்று முதலில் என்னிடம் சொன்னார். அந்த தைரியத்தில் தான் நான் பாடல்கள் பாட ஆரம்பித்தேன். இப்போது பாடல்கள் மட்டும் இல்லாமல் நான் பேட்டியில் பேசி பேசுவதை கூட அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி இருந்தார். இவரை அடுத்து ரஹ்மானின் மனைவி பேசினார். அப்போது இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்க ப்ளீஸ் என்று ரகுமான் கலாய்த்து இருக்கிறார். பின் ரகுமானின் மனைவி, சாரி எனக்கு சரளமாக தமிழ் பேச வராது. அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். ரஹ்மானின் குரல் என்னுடைய பேவரைட். நான் அவருடைய குரலில் தான் விழுந்துவிட்டேன். என்று பேசியிருந்தார்.

Advertisement