சத்தம் இல்லாமல் திடீரென்று வானத்தைப்போல சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் ஆண்டு வானத்தைப்போல. இந்த தொடர் அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.
சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார். இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக துளசி ரோலில் ஸ்வேதா நடித்து இருந்தார். சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். பின் துளசி கதாபாத்திரத்தில் நடிகை மன்யா ஆனந்த் நடித்து வருகிறார்.
வானத்தைப்போல சீரியல்:
பின் சீரியலில் ஸ்வேதாவை தொடர்ந்து சின்ராசுவாக நடித்து வந்த தமனும் விலகி விட்டார். அவருக்கு பதிலாக சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார். இவர்களை தொடர்ந்து சீரியலில் இருந்து சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த சங்கரேஸ் விலகி இருந்தார். பின் பொன்னி கதாபாத்திரத்தில் நடித்த பிரீத்தி சீரியலில் இருந்து விலகி விட்டார். இப்படி தொடர்ந்து வானத்தைப்போல சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகிக் கொண்டு இருந்தார்கள்.
சீரியல் குறித்த தகவல்:
இருந்தாலும், சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலில் பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வானத்தைப்போல சீரியல் நடிகை ஸ்வேதாவுக்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் இந்த சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஸ்வேதா. ஆனால், திடீரென்று இவர் இந்த சீரியலில் இருந்து விளக்கி விட்டார்.
ஸ்வேதா குறித்த தகவல்:
உடல்நிலை சரியில்லாததாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலில் இருந்து விலகுவதாக ஸ்வேதா கூறி இருந்தார். அதற்கு பின் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது.
ஸ்வேதா திருமண நிச்சயதார்த்தம் :
இவர் கர்நாடகவை சேர்ந்த மது ஷங்கர் கௌடா என்பவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். தற்போது இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்திற்கு கண்ணெதிரே தோன்றினாள் மற்றும் வானத்தைப்போல சீரியல் நடிகர்கள் பலருமே நேரில் சென்று வாழ்த்துக்களை வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.