நிகழ்ச்சியில் டிடி கண்ணீர் விட்டு அழுது இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு இவர் பேச்சாலும், திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.
மேலும், டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். அதிலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
டிடி திரைப்பயணம்:
அதோடு இவர் 22 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் டிடிக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
டிடி குறித்த தகவல்:
பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி சினிமா துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காபி வித் காதல். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் நிகழ்ச்சி,சினிமா என பிசியாக இருக்கிறார்.
டிடி அழுத வீடியோ:
இடையில் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் இவரால் அதிக நேரம் நிற்க முடியாது. இதனால் இவர் பெரும்பாலும் சேரில் தான் அமர்ந்து கொண்டிருக்கிறார். இதன் காரணத்தினால் தான் இவர் நிகழ்ச்சிகளிலும் பெரிதாக தொகுத்து வழங்குவதில்லை. இந்த நிலையில் டிடி கண்ணீர் விட்டு அழுது இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அண்மையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெற்றது.
நெட்டிசன்கள் விமர்சனம்:
இந்த நிகழ்வில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். இதில் டிடியும் கலந்து இருந்தார். அப்போது மேடையில் பாடகர் பிரதீப் தலைகோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் என்ற பாடலை பாடினார். அதைக் கேட்டவுடன் டிடி எமோஷனல் ஆகி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இதை பார்த்து சிலர் பாசிட்டிவான கமெண்டை போட்டாலும் சிலர் நெகட்டிவ்வான கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். அதிலும் டிடி செய்வதை பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.