முதன் முதலாக தனது காதலி புகைப்படத்தை வெளியிட்ட வானத்தைப்போல ராஜபாண்டி- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

0
1750
- Advertisement -

வானத்தைப்போல சீரியல் நடிகர் ராஜபாண்டியின் காதலி புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் வனத்தைப்போல. இந்த தொடர் அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை. சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக துளசி ரோலில் ஸ்வேதா நடித்து இருந்தார். சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். பின் துளசி கதாபாத்திரத்தில் நடிகை மன்யா ஆனந்த் நடித்து வருகிறார். பின் சீரியலில் ஸ்வேதாவை தொடர்ந்து சின்ராசுவாக நடித்து வந்த தமனும் விலகி விட்டார். அவருக்கு பதிலாக சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார்.

- Advertisement -

வானத்தைப்போல சீரியல்:

சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகர் ஸ்ரீகுமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களை தொடர்ந்து சீரியலில் இருந்து சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த சங்கரேஸ் விலகி இருந்தார். தற்போது இவருக்கு பதிலாக சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் சந்தோஷ் நடிக்கிறார். பின் பொன்னி கதாபாத்திரத்தில் நடித்த பிரீத்தி சீரியலில் இருந்து விலகி விட்டார். இப்படி தொடர்ந்து வானத்தைப்போல சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகிக் கொண்டு இருந்தார்கள். இருந்தாலும், சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சீரியலின் கதை:

தற்போது இந்த சீரியலில் பொன்னி மனசு மாறி தன்னுடைய கணவர் சின்ராசுவுடன் வாழ துடிக்கிறார். ஆனால், சின்ராசு அவர்கள் பொன்னி சரவணனை தான் காதலிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், ராஜபாண்டி தன் மனைவி துளசி கர்ப்பமாக இருப்பதாக நினைத்து கொண்டு இருக்கிறார். ஆனால், துளசி கர்ப்பமாக இல்லை. இதை வைத்து இவர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்படுத்த நினைக்கிறார்கள். துளசி பற்றிய உண்மை தெரிய வருமா? பொன்னியை சின்ராசு ஏற்று கொள்வாரா? என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

ராஜபாண்டி என்ற கதாபாத்திரம் :

மேலும், இந்த சீரியலில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஸ்வின் கார்த்திக். இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துளசியை திருமணம் செய்ததற்கு பின்பு இவருடைய கதாபாத்திரம் பாசிட்டிவாக சென்று கொண்டிருக்கின்றது. சமீபத்தில் கூட சன் குடும்ப விருது விழாவில் ராஜபாண்டிக்கு சிறந்த நாயகனுக்கான விருது கிடைத்திருந்தது.

அஸ்வின் கார்த்தி திருமணம் :

அதோடு நடிகர் அஸ்வின் கார்த்தி அவர்கள் தன்னுடைய காதலியை விருது விழாவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அஸ்வின் கார்த்தி காதலி குறித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஸ்வின் கார்த்தி காதலி பெயர் காயத்ரி ஞானசேகரன். இவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். தற்போது இந்த ஜோடியின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அஸ்வின் கார்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் திருமணம் எப்போது ? என்று கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்கள்.

Advertisement