சுப்ரமணியபுரம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் – சசிகுமார் பதிவிட்ட உருக்கமான வீடியோ பதிவு.

0
1179
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வரும் இயக்குனர்கள் பலர் உள்ளனர் அந்தவகையில் இயக்குனரும் நடிகருமான சசிகுமாரும் ஒருவர். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் மூலம்தான் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ஜெய் சசிகுமார் சமுத்திரகனி சுவாதி கஞ்சா கருப்பு போன்ற பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தது. மேலும், இந்த திரைப்படம் நடிகர் ஜெய்க்கு ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவும் அமைந்திருந்தது. நட்பு காதல் மற்றும் துரோகம் போன்றவற்றை மையமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்திருந்தார். மேலும் இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் சசிகுமார் செய்திருந்த அந்த குறிப்பிட்ட ட்வீட் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சுப்ரமணிய புறம் படம் குறித்து பேசிய சசிகுமார் கூறுகையில் “சுப்ரமணியபுரம் படமானது வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது. 15 வருடங்கள் போனதே தெரியவில்லை, இப்போதுதான் ஆரம்பித்து போன்று இருக்கிறது. ஒரு படம் 15 வருடங்களாக பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இன்னமும் அந்த படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்றால் அது மக்களின் ஆதரவு தான். எனவே அவர்களுக்கு மனமார்ந்த நன்று.

ஏனென்றால் இந்த படம் வந்தபோது அதனை தோளில் வைத்து கொண்டாடவில்லை தலையில் வைத்து கொண்டாடினார்கள். அதனை நான் எப்போதுமே மறக்க மாட்டேன். இவ்வளவு தூரம் நான் சினிமாவில் பயணப்பட்டதற்கு சுபராமணியபுரம் ஒரு முக்கியமான காரணம். எனவே அனைவருக்கும் நன்றி குறிப்பாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

-விளம்பரம்-

மேலும் பேசிய அவர் படத்தில் நடித்த சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு, ஜெய், விஜய் ஜேம்ஸ் வசந்தன் என அனைவருக்கும் என்றும், தான் இந்த 15 வருடங்களில் நல்ல மற்றும் கேட்ட விஷியங்களை பார்த்து எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொண்டேன் என்று சொல்வதை விடவும் அனுபவித்து வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். இது வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் என்று கூறினார் சசிகுமார்.

இந்நிலையில் சசிகுமார் போன்றே படத்தின் முக்கிய கதப்பத்திரத்தில் நடித்த நடிகர் மற்றும் இயக்குனருமாகிய சமுத்திரக்கனி வீடோ ஒன்றை வெளியிட்டு சுபபிரமணி படத்தில் தன்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டிருந்தார். இந்த இரண்டு வீடியோ பதிவுகளும் வைரலாகிய நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement