உனக்கு இருந்த பிரச்சனை தான் எங்க அம்மாக்கும் இருந்தது – தனது அம்மாவின் மரணம் குறித்து பேசிய வனிதா

0
2260
Roboshankar
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர்.குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார்.இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே ரோபோ ஷங்கர் குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது அவரது உடல் நலம் பற்றி தான். பாடி பெல்ட்டிங் செய்து படு கட்டுமஸ்தான உடலுடன் இருந்த ரோபோ ஷங்கர் சமீப காலமாக உடல் எடை குறைந்து வருகிறார். ரோபோ ஷங்கர் இளைத்து இருப்பதை பார்த்து பலரும் என்ன ஆனது ஏதாவது சுகரா இல்ல சரக்கா என்று கேலி செய்து வந்தனர். மேலும், ரோபோ ஷங்கர் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் விளக்கம் கொடுத்தனர்.

அதிலும் குறிப்பாக ரோபோ ஷங்கரின் உறவினரும் நடிகருமான போஸ் வெங்கட் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை வந்ததாக சொன்னார். ஆனால், இதுநாள் வரை ரோபோ ஷங்கர் இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் இருந்தார். எப்படி ஒரு நிலையில் தன்னுடைய உடல் எடை குறைந்ததற்கான காரணம் குறித்து முதன்முறையாக நம்முடைய youtube சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார் ரோபோ சங்கர்.

-விளம்பரம்-

அதில் பேசிய அவர் ‘தனக்கு உடலில் பிரச்சனை இருப்பது உண்மைதான் அனைவருக்கும் வருவது போல நோய் வந்தது எனக்கு இடையில் மஞ்சள் காமாலை வந்து இருந்தது அப்போது நான் உடல் எடையை குறைக்க டயட் இருந்தேன் அந்த சமயத்தில் மஞ்சள் காமாலை வந்ததால் என்னுடைய உடல் எப்படி மெலிந்து போனது ஆனால் அதற்குள் என்னைப் பற்றி என்னென்னவோ எழுதி விட்டார்கள் நான் இறந்து விட்டதாகவும் என்னுடைய உடல் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் கூட எழுதினார்கள் என்று உருக்கமுடன் பேசி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் ரோபோ ஷங்கரை வனிதா பேட்டி எடுத்து இருந்தார். அப்போது பேசிய வனிதா ‘என்னுடைய அம்மாவுக்கு மஞ்சள் காமாலை பிரச்சனை இருந்தது. அதுவும் எங்க அம்மாவுக்கு ரெண்டு முறை இந்த பிரச்சனை வந்திருந்தது. அதனால் தான் அவருடைய உடல்நிலை ரொம்ப மோசமானது. இதை பாத்துக்கொண்டு இருக்கும் யாராக இருந்தாலும் சரி உடம்புல ஒரு சின்ன பிரச்சனை என்றல் கூடஅதற்கு என்ன தீர்வுனு டாக்டர்கள் சொல்றதை கேளுங்க. டாக்டர்கள் எதுவும் நம்மள பத்தி தப்பா சொல்லிடுவாங்களோனு ஹாஸ்பிடலுக்கு போவதற்கு பயப்படுறதுனால தான் பிரச்சனை அதிகம் ஆகி விடுகிறது. அதனால் யாரும் உடல் விஷயத்தில் இப்படி பண்ணாதீங்க என்று வனிதா வேண்டுகோள் வைத்து உள்ளார்.

Advertisement