‘மல்லி பெல்லி’னா மறுபடியும் திருமணம்னு அர்த்தம் நான்காவது காதலா? வனிதா அளித்த பகிர் பேட்டி

0
2162
Vanithavijayakumar
- Advertisement -

கணவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் நான்காவது காதல் குறித்து வனிதா அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார்.

-விளம்பரம்-

திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

வனிதா நடிக்கும் படங்கள்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் வனிதா பிசியாக நடித்து வருகிறார்.

வனிதாவின் யூடியூப் சேனல் :

மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வனிதா விஜயகுமார் திருப்பதிக்கு சென்று இருக்கிறார்.

-விளம்பரம்-

திருப்பதிக்கு சென்ற வனிதா:

விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையான் சாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்திருக்கிறார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், தமிழில் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்கள் வரிசையாக திரைக்கு வர இருக்கிறது. தற்போது நான் தெலுங்கில் நடித்த மல்லி பெல்லி படம் திரைக்கு வந்து இருக்கிறது. திரையில் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான்காவது காதல் குறித்து சொன்னது:

ஆனால், நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், ஆண்டவன் அருளால் எனக்கு திரும்பவும் யார் மீது வேண்டும் என்றாலும் காதல் ஏற்படலாம். அப்படி நடந்தால் என் வாழ்க்கையில் சரியான முடிவை எடுப்பேன் என்று கூறியிருந்தார். இப்படி வனிதா போட்ட புது குண்டு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னுடைய மூன்றாவது கணவர் பீட்டர் பால் இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வனிதாவிற்கு நான்காவது காதலா? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement