அப்பா பொண்ணுக்கு இடையில் இருக்கும் உறவு பற்றி கேவலமாக பேசுபவர்கள் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் – சரமாரியாக பதிலடி கொடுத்த சம்யுக்தா

0
2213
- Advertisement -

நடிகை சகிலா கேட்ட கேள்விக்கு சராமாரியாக சம்யுக்தா கொடுத்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில வாரங்களாகவே சின்னத்திரை வட்டாரத்தில் சம்யுக்தா- விஷ்ணுகாந்த் சர்ச்சை தலைவிரித்து ஆடி கொண்டு இருக்கிறது. சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-
vishnukanth

மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் சமீபத்தில் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருமணம் ஆன 15 நாட்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. திருமணத்திற்கு பின்னர் சம்யுக்தா தன் நண்பர்களுடன் பேசி வந்ததால் தான் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது என்று விஷ்ணுகாந்த் பேட்டி அளித்து இருந்தார்.

- Advertisement -

விஷ்ணுகாந்த் – சம்யுக்தா சர்ச்சை:

அதில் அவர் சம்யுக்தா குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆனால், விஷ்ணு சொல்வது எல்லாம் பொய் என்று சம்யுக்தா கூறி இருந்தார். அதோடு அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் முக்கியம் என்றும் கூறி இருந்தார். இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை சம்யுக்தா, ரவி என்பவரை காதலித்து இருக்கிறார்.

சம்யுக்தா மீதான குற்றச்சாட்டு:

ரவி வேறு யாரும் கிடையாது சம்யுக்தாவுடன் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் நடித்தவர் தான். உண்மையாகவே இவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சம்யுக்தாவிடம் ரவி எல்லை மீறி இருக்கிறார். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள். இதை சம்யுக்தா பொதுவான நபரிடம் கூறி இருக்கிறார். இதை விஷ்ணுகாந்த் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். இதனால் நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நபராக சம்யுக்தா இருக்கிறார். அதோடு ஆண் வர்கமே இப்படித்தான் என்றும் கூறி வருகிறார்.

-விளம்பரம்-

சம்யுக்தா குறித்து ஷகீலா சொன்னது:

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகை ஷகிலா அவர்கள் விஷ்ணுகாந்த்தை பேட்டி எடுத்திருந்தார். அதில் அவர், சம்யுக்தாவிற்கும் அவருடைய அப்பாவிற்கும் ஏதாவது தப்பான உறவு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக எந்த ஒரு பேட்டியும் கொடுக்காத சம்யுக்தா முதல்முறையாக யூடியூப் சேனலுக்கு பேட்டி பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர், ஒரு பெண் நடிகை இவ்வளவு மோசமான கேள்விகளை எப்படி தான் கேட்கிறார்களோ? அவர்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி என்பதே கிடையாதா? இன்டர்வியூ எடுப்பவர்கள் யாருக்கும் ஒருதலைபட்சமாக பேச மாட்டார்கள்.

சம்யுக்தா கொடுத்த பதில் :

ஆனால், இந்த பெண் நடிகை அப்படி தான் பேசுகிறார். இது எவ்வளவு மோசமான செயல். அப்பா பொண்ணுக்கு இடையில் இருக்கும் உறவு பற்றி கேவலமாக பேசுபவர்கள் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லும் வார்த்தையில் இருந்தே தெரிகிறது. என்னைப் பற்றி ஜட்ஜ் பண்ண அந்த நடிகை யார்? இப்படி எல்லாம் கேள்வி கேட்க அவர் யார்? இதை அவரா செய்தாரா? இல்லை விஷ்ணுகாந்த் சொல்லி கேள்வி கேட்டாரா? என்று கோபத்தில் நடிகை ஷகிலாவை திட்டி சம்யுக்தா பேசியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து சம்யுக்தாவின் அப்பா கூறியிருப்பது, ஒரு அப்பா பெண்ணை மீடியாவில் கேவலப்படுத்தி கேள்வி கேட்பது சரிதானா? நாம் தமிழ்நாட்டில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி கேடுகெட்ட புத்தி உள்ளவர்களை என்ன செய்வது என்று பேசி இருக்கிறார்.

Advertisement