‘சாப்பிடாம அவர் பட்ட கஷ்டம்’ – விஷால் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் சொன்ன விஷயம்

0
32
- Advertisement -

நடிகர் விஷால் குறித்து நடிகை வரலட்சுமி பேசி இருக்கும் விஷயங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் அஞ்சலி, வரலட்சுமி, மணிவண்ணன், மனோ பாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கும் படம் தான் ‘மதகஜராஜா’. கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட இப்படம், பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியதால் வெளியாகாமல் இருந்தது. இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கலை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி இப்படம் வெளியாகும் என பட குழு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர்‌. சி உட்பட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் மிகவும் உடல்நிலை முடியாமல் இருந்தார். சிவந்த கண்கள், நடுங்கும் கைகள், நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்தார். இதைக் கண்ட அவரது ரசிகர்கள் விஷாலின் உடல் நிலையை பார்த்து மிகவும் கவலையடந்தனர் ‌ அதே சமயம், அவரின் உடல்நிலை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

வரலட்சுமி பேட்டி:

இந்நிலையில், மதகஜராஜா படம் குறித்து அப்படத்தில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில், நான் விஷாலிற்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமாகி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மதகஜராஜா படத்தின் வெளியீட்டிற்கு எந்த பிரமோஷனும் இல்லாமல் இவ்வளவு வரவேற்பு கிடைப்பது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அந்த படத்திற்க்காக நாங்கள் அவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்கிறோம்.

விஷால் குறித்து:

குறிப்பாக விஷால் இந்தப் படத்திற்காக சாப்பிடாமல் 8 பேக்ஸ் எல்லாம் வைத்திருப்பார். இந்த படத்தில் அவரது உழைப்பு நிச்சயம் பேசப்படும். அதே மாதிரி அவர் பாடிய பாடல் எங்களை ஒரு வழி ஆக்கிவிட்டது. அந்தப் பாடலை மூன்று நாட்கள் நாங்கள் ஷூட்டிங் செய்தோம். அப்போது ஒவ்வொரு முறை அந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எப்போது அந்த பாட்டின் ஷூட்டிங் முடியும் என்பது போல் இருக்கும். எனக்கும் விஷாலுக்கும் சோடா பாட்டில் சீன் ஒன்று இருக்கும். அதில் நான் நிறைய டேக் வாங்கினேன்.

-விளம்பரம்-

கதாபாத்திரங்கள் குறித்து:

மேலும், அஞ்சலியுடன் எனக்கு இந்த படத்தில் தான் நட்பு ஏற்பட்டது. அது இப்போது வரைக்கும் தொடர்கிறது. மேலும், இப்போது எனக்கு காமெடி கதாபாத்திரங்களிலும், வாரியர் போன்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது. அந்த வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். சில கதாபாத்திரங்கள் மனசுக்கு பிடித்த மாதிரி இருக்கும். அதிலும் நடிக்க வேண்டும் என்று ஆசை. சில கதாபாத்திரங்கள் பிடிக்கவில்லை என்றாலும் காசுக்காக நடிப்போம்.

ஸ்பெஷல் பொங்கல்:

பின், படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை எல்லாம் நான் தலையில் ஏற்றிக்கொள்வதே கிடையாது. நாம் நம் வேலையை மட்டும் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதோடு வருகின்ற பொங்கல் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த பொங்கல் எனக்கு தல பொங்கல். அத்துடன் 12 ஆண்டுகளுக்குப் பின் எனது படம் வெளியாகிறது. அது மட்டும் இல்லாமல் எனது அம்மா நடித்த ‘வணங்கான்’ படமும் வெளியாகி இருக்கிறது என்று சந்தோஷமாக வரலட்சுமி பேசியிருக்கிறார்.

Advertisement