டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அழுத காரணம் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'போடா போடி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் சமீப காலமாக இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் பெயரை எடுத்து தரவில்லை.

தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் அஞ்சலி, வரலட்சுமி உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருந்த ‘மதகஜராஜா’ படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருட பொங்கலை முன்னிட்டு வெளியாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் தற்போது வரலக்ஷ்மி சின்னத்திரையிலும் களம் இறங்கி இருக்கிறார். அதாவது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் 3 நிகழ்ச்சியில் நடுவராக வரலட்சுமி சரத்குமார் இருக்கிறார்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் 3:
இவருடன் சினேகா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் என்றென்றும் 80ஸ் சுற்றி நடைபெற்றது. அதில் வரலட்சுமி சரத்குமார், என்னுடைய அப்பா, அம்மா இருவருமே வேலைக்கு செல்பவர்கள். என்னை மற்றவர்களின் வீட்டில் விட்டு பார்த்துக் கொள்ள சொல்வார்கள். அப்போது சின்ன வயதில் என்னை 5 லிருந்து 6 பேர் பாலியல் தொந்தரவு செய்து இருந்தார்கள். நிறைய கஷ்டங்களை கடந்துதான் வந்திருக்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=Qz2VlWH_cEg
வரலக்ஷ்மி பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் வரலக்ஷ்மி, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் எனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை பற்றி பேசும்போது நான் ரொம்பவே அழுது விட்டேன். பொது வெளியில் ரொம்ப தைரியமாக பேசும் நான் அந்த நிகழ்ச்சியில் அழுது விட்டேன். நான் அழுதது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது. காரணம், அங்கு என் முன்னாடி நடனமாடிய பெண் கிட்டத்தட்ட என்னுடைய குணங்களை தான் ஒத்திருந்தார். அவர் சத்தமாக பேசுவார். தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சிரிக்க வைப்பார். நானும் அப்படிப்பட்டவள் தான். அதனால் அவருக்கு நேர்ந்த பாலில் துன்புறுத்தலை பற்றி பேசும்போது அது எனக்கு ரொம்பவே நெருக்கமாகிவிட்டது.

நிகழ்ச்சியில் அழுத காரணம்:
அதனால் தான் அன்று நான் மனமுடைந்து அழுதுவிட்டேன். மேலும், நான் என்னை சுற்றி இருப்பவர்கள் கொஞ்சம் கலங்கினால் கூட கண்டுபிடித்து விடுவேன். அவர்களை மகிழ்விக்க முயற்சிப்பேன். அவர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் அவர்களிடமே கேட்பேன். நான் எனக்கு நேர்ந்த சம்பவத்தை என்னுடைய 18 வயதில் தான் என்னுடைய பெற்றோர்களிடம் சொன்னேன். இன்றும் இதுபோன்ற சம்பவத்தை எல்லாம் வெளியே சொல்ல கூடாது என்றெல்லாம் நிறையே பேர் சொல்கிறார்கள். ஆனால், அது ரொம்பவே தவறு. நான் பேசியதை பார்த்த பல பெண்கள், எனக்கு நிறைய மெசேஜ்களை அனுப்பி இருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=gRL5SbBRvOk
பெண்களுக்கு சொன்ன அறிவுரை:
அதில், நீங்கள் சொன்னதை பார்க்கும் பொழுது எனக்கு நடந்ததை எல்லாம் வெளியில் சொல்லும் தைரியம் வந்திருக்கிறது என்று சொன்னார்கள். இன்னும் சில பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்பத்தை எல்லாம் வெளியில் சொல்ல வேண்டும் என்று அவர்கள் பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தான் வெளியில் சொல்ல விடாமல் தடுக்கிறார்கள். தயவுசெய்து அப்படி எல்லாம் செய்யாதீர்கள். அவர்களுக்கு நேர்ந்து இருக்கக்கூடிய பாலியல் துன்புறுத்தல் எப்படி ஆனது? என்பதை நீங்கள் பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும். பெண்கள் இது போன்ற சம்பவங்களை வெளியில் சொல்வதற்கு அதிக தைரியம் தேவைப்படுகிறது. அந்த தைரியத்தை அவர்களுக்கு நீங்கள் தான் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.






