-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

4 மாத கடின உழைப்பு, உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கும் வரலக்ஷ்மி – போடா போடில வந்த மாதிரி ஆகிட்டாங்களே.

0
991
varalakshmi

உடல் எடை குறைத்து ஆளே மாறி இருக்கும் நடிகை வரலக்ஷ்மியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பாலிவுட்டை போல தமிழ் சினிமா உலகிலும் காலம் காலமாக தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : 4 மாத கடின உழைப்பு, உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கும் வரலக்ஷ்மி – போடா போடில வந்த மாதிரி ஆகிட்டாங்களே.

இரவின் நிழல் :

-விளம்பரம்-

.மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் இரவின் நிழல். பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுஇருந்தது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துஇருந்தார். அகிரா புரோடக்சன் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தின் கதை சுமார் தான் என்றாலும் ஒரே ஷாட்டில் இந்த படத்தை எடுப்பதற்கு பார்த்திபன் மேற்கொண்ட முயற்சியை பலரும் பாராட்டி இருந்தனர்.

அடுத்தடுத்து படங்கள் :

மேலும், வழக்கம்போல இந்த படத்திலும் வரலக்ஷ்மி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இறைவன் நிழல் திரைப்படத்திற்கு பின்னர் இவர் பைபிள் நடிப்பில் வெளியாகியிருந்த காட்டேரி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து நடிகை வரலட்சுமி யசோதா, பாம்பன். பிறந்தநாள் பராசக்தி கலர்ஸ், போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

4 மாத Transformation :

இது மட்டுமல்ல அது கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால் தன்னுடைய உடல் எடை விஷயத்தில் அக்கறை காட்டி வரும் வரலட்சுமி தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்து இருக்கிறார். இது குறித்து தன்னுடைய Transformation வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் வரலட்சுமி நான்கு மாதத்தில் கடின உழைப்பின் மூலம் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருப்பதாக கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news