காயத்ரி ரகுராம் விரும்பித்தான் வந்தார் – பல உண்மைகளை சொன்ன வரிச்சியூர் செல்வம்

0
1683
- Advertisement -

கைகளில் பத்து விரல்களிலும் மோதிரம், கழுத்தில் கிலோ கணக்கில் பாம்பு போல தங்க செயின் என இருப்பவர் வரிச்சியூர் செல்வம். இவர் கொரோன காலகட்டத்தின் எல்லோரும் முகக்கவசம் அணியும் போது இவர் தங்கத்தில் முகக்கவசம் செய்து அணிந்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் தனக்கு காயத்ரி ரகுராமை யார் என்று தெரியாது எனவும் தன் வாழ்க்கையில் ஒருமுறைதான் அவரைப் பார்த்துள்ளேன் எனவும் கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

வரிச்சியூர் செல்வம் பேட்டி :

அந்த பேட்டியில் வரிச்சியூர் செல்வம் பேசுகையில் எம் ஆர் என்றால் தொப்பி, கலைஞர் என்றால் கண்ணாடி, வரிச்சியூர் செல்வம் என்றால் நகை. நான் என்ன 1000 வருடங்களா வாழ்ந்து விட போகிறேன். என்ன விமர்சனம் வந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன். விமானங்களில் சென்றாலும் இப்படத்திதான் செல்வேன். நான் இதற்காக வரி கட்டிக்கொண்டிருக்கிறேன் எனவே எதற்காக நகைகளை கழற்றவேண்டும். நான் வெளியில் பல சவரன் நகைகளுடன் சென்று வருகிறேன்.

- Advertisement -

நான் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன். நான் போட்டிருக்கும் நகைகள் 1.35 கோடி வரும். என்னை அடித்து நகைகளை திருடி செல்லலாம் ஆனால் நான் நல்லவன் அதனால் தான் என்னிடம் இருந்து நகைகளை யாரும் பரித்து செல்லவில்லை. ஒருவேளை அப்படி நடந்தாலும் எதற்கு வம்பு என்று நானே கொடுத்து விடுவேன்.

நான் ரவுடி கிடையாது :

என்னை ஏன் ரவுடி என்று சொல்கிறீர்கள். நான் யாரவதை துன்புறுத்தி பணம் பெற்றேனா இல்லை மக்களுக்கு இடையூறாக இருந்தேனா. மதுரை காரர்கள் என்றால் ரவுடிகள் என்று சினிமாவில் சித்தரித்து வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் மதுரை காரர்கள் பாசமானவர்கள். மதுரை என்றால் மீனாட்சி அம்மன் மதுரை மண்ணில் யாரும் எதையும் செய்து விட முடியாது. என்னை ஜாலிமென் என்று கூறுங்கள் இல்லை என்றால் ஜோக்கர் என்று கூட சொல்லுங்கள் ஆனால் ரவுடி என்று சொல்லாதீர்கள் எனக் கூறினார்.

-விளம்பரம்-

காயத்ரி ரகுராமை யாரென்றே தெரியாது :

மேலும் பேசிய வரிச்சியூர் செல்வம் ” நான் ஒரு முறை ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன். அங்கு நான் வித்தியாசமாக இருந்ததால் என்னுடன் காயத்ரி ரகுராம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடனே அந்த புகைப்படத்தை திருச்சி சூர்யா தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். உடனே நான் அவருக்கு போன் செய்து என்னப்பா இப்படடியெல்லாம் செய்யலாமா? அந்த பொண்ணு பாவம், போட்டோ எடுத்தது குற்றமா என்று கேட்டேன். அதற்கு அவர் சாரிண்ணே என்று கூறினார்.

எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் :

அமைசச்சர் மூர்த்தி அவர்களை எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவரிடம் நான் உதவி கேட்டதில்லை, கேட்கும் அவசியமும் எனக்கு வந்ததில்லை. எனக்கு காயத்ரி ரகுராமை யாரென்றே தெரியாது அவரை ஒருநாள் தான் என்னுடைய வாழ்க்கையில் பார்த்தேன் என்றும், எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று வரிச்சியூர் செல்வம் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement