விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. பொங்கல் திருவிழாவிற்கு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கின்றது. இந்த நிலையில் ஜில்லா மற்றும் வீரம் வெளியாகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் ஒரே நேரத்தில் மோத இருக்கின்றன. அதாவது விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒரே நேரத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இரு படங்களின் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படியிருக்கும் போது துணிவு படத்தின் ட்ரைலர் கடந்த 31 ஆம் தேதி வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் துணிவு படத்தின் ட்ரைலரில் விஜய் முன்னதாக நடித்த இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தை போல இருக்கிறது என்று விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருந்தது.
துணிவு ட்ரைலர் செய்த சாதனை :
இப்படி ஒரு நிலையில் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியான போது அது பீஸ்ட் படம் போல இருக்கிறது என்று பலரும் கேலி செய்து வந்தனர். இருப்பினும் துணிவு படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, யூடியூபில் டிரெண்டானது. இதனால் பார்வைகள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வந்த நிலையில், 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்ததாக படக்குழு வீடியோவை பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்ததது.
THE BOSS has arrived 🔥#VarisuTrailer feast is here nanba 💥
— Sri Venkateswara Creations (@SVC_official) January 4, 2023
▶️ https://t.co/SXIatTvGF0#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @karthikpalanidp @Cinemainmygenes @Lyricist_Vivek
ட்ரைலர் தாமதத்திற்கு காரணம் :
முன்னதாக ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை அள்ளியிருந்த நிலையில் அந்த சாதனையை தற்போது அஜித்தின் ;துணிவு’ படம் தொட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் வாரிசு படத்தின் ட்ரைலரை எதிர் நோக்கி காத்துக்கொண்டு இருந்தனர். வாரிசு படத்தின் ட்ரைலர் தாமத்மானதற்கு காரணம் சென்சார் தான் என்று கூறப்பட்டது.
வாரிசு சென்சார் சான்றிதழ் :
துணிவு படம் 22 மணிநேரம் 23 நிமிடங்களும், வாரிசு 2 மணிநேரம் 48 நிமிடங்களும் இருக்கும் என்று தகவல் வெளியாகிய நிலையில் வாரிசு படத்தின் நிறைவு வேலைகள் தாமதமானது. இப்படி ஒரு நிலையில் இந்த இரண்டு படங்களின் சென்சார் சான்றிதழும் வெளியானது. இதில் வாரிசு பாடத்திற்கு U சான்றிதழும் துணிவு படத்துக்கு U/A சான்றிதழும் வழங்கப்பட்டு இருந்தது.
துணிவு சாதனையை முறியடிக்குமா :
பொதுவாக அஜித் படங்களின் அப்டெட்டுகள் தான் தாமதமாகும் ஆனால், இம்முறை துணிவு படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியானது. ஆனால், வாரிசு படம் வெறும் புகைப்பட அப்டேட்டுகளுடன் மட்டும் விட்டுக்கொண்டு ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வாரிசு படத்தின் ட்ரைலர் துணிவு பட சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.