தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் தவசி. அந்த படத்திற்கு பின்னர் ரஜினிமுருகன், கொம்பன், விசுவாசம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கூட துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தவசி. இவரை பெரும்பாலோருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாகத்தான் தெரியும்.
ஆனால் கிழக்கு சீமையிலே படம் துவங்கி கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வரும் இவர் எண்ணற்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் தவசி புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. அதில் பேசியுள்ள தவசி தான் 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருவதாகவும், தமக்கு இப்படி ஒரு நோய் ஆண்டவன் கொடுப்பான் என்று நினைத்து பார்க்க இல்லை என்றும் கூறி இருக்கிறார் நடிகர் தவசி.
தற்போது தவசியை தவசியை தனது மருத்துவமனையிலேயே அனுமதித்து இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ சரவணன். இதுகுறித்து பேசிய சரவணன், தவசிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் வந்துள்ளது. அதனால், சாப்பிட முடியாமல் அவர் சிரமப்பட்டார்.தற்போது எண்டோஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளித்து சாப்பிட வைத்துள்ளோம். அவரது நிலையை உணர்ந்து இலவசமாக எங்கள் மருத்துவமனை சார்பில் சிகிச்சை வழங்கி வருகிறோம்,இருப்பினும், இவருக்கு யாரேனும் உதவ நினைத்தால் அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினால் வறுமையில் இருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு அது பேருதவியாக இருக்கும்’’என்று கூறி இருந்தார்.
இப்படி நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள நடிகர் தவசியிடம் எப்போதிலிருந்து இந்த வியாதி உங்களுக்கு இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எனக்கு இந்த பிரச்சனை ஒரு ஐந்து ஆறு மாதமாக இருக்கிறது நான் தான் ஷூட்டிங் ஷூட்டிங் என்று அதை கவனிக்காமல் விட்டுவிட்டேன். கடந்த சில மாதத்திற்கு முன்னர் பரிசோதித்த போதுதான் எனக்கு உணவுக்குழாய் கட்டி இருக்கிறது என்று சொன்னார்கள். அப்போதுதான் இந்த பிரச்சனை வந்தது. எனவே நான் வேலம்மாள் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அவர்கள் 6 ஊசியில் சரி செய்து தருவதாக சொன்னார்கள்.
அதன் பின்னர் உங்களுக்கு சரியாகி விட்டது இனி மாத்திரை மட்டும் சாப்பிடுங்கள் என்று சொன்னார்கள். நானும் சாப்பிட்டேன் அதன் பின்னர் மறுபடியும் இதே நிலைக்கு வந்துவிட்டேன் பின்னர் என்ன ஏது என்று அவர்களிடம் சென்று கேட்டபோது மறுபடியும் உங்களுக்கு வந்து விட்டது அதனால் மீண்டும் ஊசி போட வேண்டும் என்று சொன்னார்கள். என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள். அதன்பின்னர் டிவில் கேன்சர் பற்றி சொன்னேன் நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன் அதன் பின்னர் நண்பர் மூலமாகத்தான் இங்கே வந்தேன் தற்போது ஓரளவுக்கு நன்றாக இருக்கிறேன் என்று பேசிக்கொண்டிருக்கும் போது என்னால் பேச முடியவில்லை மற்றவற்றை மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று மிகவும் பரிதாபமாக பேசியுள்ளார் தவசி.