தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது ஹீரோ, ஹீரோயினாக ஜொலித்து வருகின்றனர். விஜய் முதல் சிம்பு வரை பல டாப் நடிகர்கள் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் தான். அதிலும் விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தால் வேற லெவல் பேமஸ் தான். தமிழ் சினிமாவில் நடித்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துவிட்டனர். அந்த வகையில் அஜித்தின் வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமியின் லேட்டஸ்ட் புகைப்படம் உங்களை வியக்க வைக்கும்.
தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் வீரம். சிறுத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கிய இரண்டாவது படம் இது. இதில் தமன்னா, பாலா, சமாதானம், நாசர் என்று பலர் நடித்து இருந்தனர். மேலும், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.
யுவினா நடித்த படங்கள் :
இருப்பினும் மற்ற படங்களை விட வீரம் படம் தான் மாபெரும் வெற்றியை பெற்றது. வீரம் படத்தில் தமன்னாவின் குடும்பத்தில் நடித்த சிறுமி தான் யுவினா. இவரை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது Avm நிறுவனம் தான். 2011 வெளியான உறவுக்கு கை கொடுப்போம் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும், சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் அறிமுகமானார்.
யுவினா நடித்த சீரியல் :
அதன் பின்னர் தான் வீரம் படத்தில் நடித்தார். இதில் கயல் என்ற பெயரில் நடித்தார். காயல்விழியின் உண்மையான பெயர் யுவினா. 2008ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் யுவினா. இவருடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.யுவினாவின் அப்பாவிற்கு தனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்க ஆசை. 2013ஆம் ஆண்டு உறவுக்கு கை கொடுப்போம் என்ற ஒரு சீரியலில் நடித்தார் யுவினா.
யுவினா லேட்டஸ்ட் புகைப்படங்கள் :
அதன் பின்னர் படங்களில் நடிப்பதற்கென சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார் அவரது அப்பா. மேலும், யுவினா, தமிழில் அரண்மனை, மாஸ், கத்தி, மஞ்சப் பை, மேகா போன்ற பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். தற்போது மம்மி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார் யுவினா.இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.