வீரமே வாகை சூடம் – முழு விமர்சனம் இதோ.

0
914
vishal
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து இருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை து.பா. சரவணன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் தயாரித்திருக்கிறார். மேலும், படத்தில் டிம்பிள் ஹயாத்தி , யோகி பாபு, ரமணா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் பொங்கலன்று வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போய் இன்று வெளியாகியுள்ளது. விஷாலின் இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

ஒரு சாதாரண மனிதன் அசாதாரண சூழ்நிலையை எப்படி கையாண்டு வெற்றி பெற்றார் என்பதே படத்தின் ஒரு வரி. ஒரு அரசியல் வாதிக்கும் சாதாரண மனிதருக்கும் இடையே நடக்கும் போராட்டமே வீரமே வாகை சூடும் படத்தின் கதை. படத்தில் காவல் துறையில் எஸ்ஐ ஆக வேண்டும் என்ற கனவுடன் முயற்சி செய்து வருகிறார் ஹீரோ விஷால். அப்போது எங்கு அநீதி நடந்தாலும் விஷால் உடனடியாக கோபப்படுகிறார். இந்த கோபம் காவல்துறைக்கு நல்லதில்லை என்று விஷாலின் தந்தை தொடர்ந்து அவருக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே வருகிறார்.

- Advertisement -

விஷாலின் கனவு:

இருந்தாலும் விஷால் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தாமல் அநியாயம் நடக்கும் இடங்களில் தட்டிக் கேட்கிறார். இன்னொரு பக்கம் வில்லன் நடத்தி வரும் தொழிற்சாலையை எதிர்த்து பரிசுத்தம் என்பவர் புரட்சி செய்கிறார். பரிசுத்தத்தின் புரட்சியால் தனது அரசியல் கனவு கனவாகவே போய்விடும் என்று எண்ணி வில்லன் முதலில் அவரிடம் பேரம் பேசி வருகிறார். ஆனால், பரிசுத்தம் பணத்துக்காக மயங்கமாட்டேன் என்று கூறும் வார்த்தைகளால் வில்லன் கோபம் அடைந்து அவரை கொலை செய்கிறார். இந்த கொலையை விஷாலின் தங்கை பார்க்கிறார்.

விஷாலின் தங்கையை கொலை செய்யும் தங்கை:

உடனே வில்லன் பாபுராஜ் விஷாலின் தங்கையையும் அதே இடத்தில் கொலை செய்கிறார். இதனால் விஷால் குடும்பமே உருக்குலைந்து போகிறது. இதன் பின் தன் தங்கையை கொன்றது யார்? எதற்காக தனது தங்கையை கொலை செய்கிறார்கள்? அந்த எதிரியை விஷால் கண்டுபிடித்தாரா? விஷால் உடைய காவல்துறை கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை. வழக்கம்போல் விஷால் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ஆக்ஷன், சென்டிமென்ட், கோபம் என அனைத்திலும் விஷால் ஸ்கோர் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

போராடும் விஷால்:

தங்கையின் சாவுக்கு நியாயம் கேட்டுப் போராடும் ஒரு அண்ணனின் பாசத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் விஷால். விஷாலுக்கு பிறகு இந்த படத்தில் அதிகமாக யோகிபாபு ஸ்கோர் செய்கிறார். நகைச்சுவைக்கும் மட்டும் இல்லாமல் உறுதுணையாக இருக்கும் நண்பன் கதாபாத்திரத்திலும் யோகிபாபு நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் விஷாலின் தங்கையாக ரவீனாக, அப்பாவாக மாரிமுத்து நடித்திருக்கிறார்.

படத்தில் பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கதை சாதாரண திரைக்கதையாக இருந்தாலும் இயக்குனர் எடுத்துக் கொண்ட விதம் சூப்பராக இருக்கிறது. திரையரங்கில் பல இடங்களில் கிளாப்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறது. இருந்தாலும் சில இடங்களில் சலிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் இயக்குனர் கவனம் செலுத்தி இருந்தால் வேற லெவல் இருந்திருக்கும்.

அதுமட்டுமில்லாமல் ரன்னிங் டைம் படத்திற்கு நெகட்டிவாக அமைந்துள்ளது என்று சொல்லும். படத்தில் பாடல்கள் எல்லாம் ஓகே என்று சொல்லும் அளவிற்கு தான் உள்ளது.சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். ஆனால், சில காட்சிகள் இதற்கு முன் வந்த படங்களை நினைவு படுத்துகிறது என்று சொல்லலாம். விஷாலுக்கும் அவளது தங்கை ரவினாவுக்கும் இடையே வரும் காட்சிகள் அழுத்தமாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எந்த புதுமை இல்லாமல் வழக்கமான பொழுதுபோக்கு சினிமாவாக தான் வீரமே வாகை சூடும் படம் சென்றிருக்கிறது.

நிறைகள் :

விஷாலின் நடிப்பு சூப்பர். படத்தில் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள் .

இயக்குனரின் கதைகளும் அருமை.

சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் வேற லெவல்.

எடிட்டிங், ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது என்று சொல்லலாம்.

குறைகள் :

வழக்கமான கதை என்பதால் முதல் பாதி ரசிகர்களை ரொம்பவே சோதித்தது.

படத்தின் ரன்னிங் டைம் நெகட்டிவாக உள்ளது.

இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருக்கும்.

அண்ணன் தங்கை கதாபாத்திரத்தில் அழுத்தம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இறுதி அலசல்:

காசு கொடுத்து தியேட்டருக்கு சென்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி அடையவில்லை என்றாலும் ஏமாற்றம் இல்லை என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் வீரமே வாகை சூடும் – தோல்வி அடைய வில்லை.

Advertisement