சினிமாவில் அறிமுகமாகும் வெங்கட் பிரபுவின் மகள் – அதுவும் யார் படத்தில் தெரியுமா?

0
843
VenkatPrabhu
- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் திரையுலகில் அறிமுகமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இவர் ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே இவர் இளைஞர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி,சென்னை 28-2 போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

வெங்கட் பிரபு திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ் கூட இயக்கி இருக்கிறார். இப்படி இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதையை இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.

மாநாடு படம்:

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து வெங்கட்பிரபு அவர்கள் மன்மதலீலை என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

கஸ்டடி படம்:

இந்த படத்தில் கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். அதோடு இந்த படத்தில் நாக சைதன்யா போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இது தான் இவரின் முதல் போலீஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சம்பத்ராஜ், பிரேமி விஸ்வநாத் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைக்கிறார்கள். மேலும், இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

வெங்கட் பிரபுவின் மகள்:

இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் மகள் திரை உலகில் அறிமுகமாக இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, கஸ்டடி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியில் வெங்கட் பிரபு மும்முரமாக இறங்கி இருக்கிறார். இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ சிவானி ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இது குறித்த போஸ்டர் கூட வெளியாகி இருக்கிறது. மேலும், வெங்கட் பிரபுவின் மகள் பாடல் ஆசிரியராக திரை துறையில் அறிமுகம் ஆகிறார். இவர் எழுதிய பாடல் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடல் காவல்துறையை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ சிவானி தன்னுடைய ஐந்து வயதிலேயே தாய் என்ற ஆல்பத்தில் பாடல்களை பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement