‘என்னங்கடா ? ஆளாளுக்கு எங்க வாத்தியாரா பல்லு புடிச்சி பாத்தீங்கள்ல ? – தன் அஸிஸ்டன்ட் போட்ட மீமுக்கு வெங்கட் பிரபுவின் ரியாக்ஷன்.

0
501
venkatprabhu
- Advertisement -

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல போராட்டங்கள், பிரச்சனைகளை கடந்து மாநாடு படம் வெளியானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் சிம்புவை கொண்டாடி வருகின்றனர். சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த சிம்புவிற்கு மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் இயக்கி தயாரித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆகவே ரொம்ப நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாநாடு படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : பீஸ்ட் படத்தின் Bgm, Kgf நடிகர் யாஷ் படத்தில் இருந்து சுடப்பட்டதா. இதை நீங்களே கேட்டு முடிவ சொல்லுங்க

- Advertisement -

மேலும், இந்த படத்திற்க்கான முன் பதிவுகளுக்கான டிக்கெட்டுகள் கூட மலமலவென விற்றுத்தள்ளியது. ஆனால், இந்த படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக மீண்டும் சில காரணங்களால் இந்த படம் வெளியாகாது என்று தயாரிப்பாளர் அறிவித்தார். ஆனால், மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் சொன்ன தேதியில் வெளியிடபட்டு ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இந்த படத்தில் டைம் லூப் என்ற ஒரு புதிய கான்செப்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். அதோடு திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. வெங்கட் பிரபுவிற்கு சரி, சிம்புவிற்கும் சரி இந்த படம் ஒரு மிகப்பெரிய கம் பேக் படமாக அமைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் அசிஸ்டன்ட்டுகள் ஒருவர் ட்விட்டரில் சார்பட்டா பரம்பரையில் வரும் ஒரு பிரபலமான காட்சியை மீமாக பகிர்ந்து ‘என்னங்கடா ? ஆளாளுக்கு எங்க வாத்தியாரா பல்லு புடிச்சி பாத்நீங்கள்ல ? Imdb ரேட்டிங்ல 9.6 டா’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு வெங்கட் பிரபு மிகவும் சிம்பிளாக ‘டேய்’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement