மாநாடு படத்தை கை விட்ட சிம்பு.! சிம்புவை மறைமுகமாக தாக்கி வெங்கட்பிரபு போட்டு ட்வீட்.!

0
3411
simbu-vp
- Advertisement -

செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து நடிக்கும் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதாக இருந்தது இந்த மடத்தின் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட இருந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சிம்பு வெளியேறிவிட்டதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும்,இந்த படம் கைவிடபட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபும் ட்வீட் செய்துள்ளார். அதில், என் சகோதரர் சிம்புவுடன் வேலை செய்ய முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. தயாரிப்பாளாரின் நிதி பிரச்சனையினால் இந்த படம் கைவிடபட்டுள்ளது. இருப்பினும் தயாரிப்பாலரின் இந்த முடிவை மதிக்கறேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மாநாடு படம் இல்லை என்றால் என்ன சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் மகா மாநாடு என்ற தலைப்பில் சிம்பு ஹீரோவாக படம் நடிக்கிறாராம். இந்த படத்தை சிம்புவின் தந்தை டி.ஆர் இயக்குகிறார் என்றும் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 15 ) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெங்கட் பிரபு ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், வம்பை வளர்க்காமல் அன்பை வளர்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட பலரும் சிம்புவை தான் வெங்கட் பிரபு மறைமுகமாக கலாய்க்கிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement