ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தியது ஏன் ? போலீஸ் அதிகாரி கொடுத்த விளக்கம்.ஏ ஆர்

0
235
- Advertisement -

ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது குறித்து போலீஸ் அதிகாரி கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் . இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார் மேலும், இவர் மேற்கத்திய இசையை மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இல்லாமல் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ரகுமான்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் ரகுமான். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது குறித்து போலீஸ் அதிகாரி கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜ் பகதூர் மில்ஸ் பகுதி அருகே இருக்கும் திறந்தவெளியில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சி சினிமா லைப்மென்ட்ஸுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி மாலையில் தொடங்கப்பட்டது. இதில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகியிருந்த பல பாடல்கள் இசையமைக்கப்பட்டது. பின் இரவு 10 மணி ஆனதும் ஏ ஆர் ரகுமான் ‘தில் சே’ படத்தில் இடம் பெற்ற ‘சைய்ய சைய்யா’ என்ற பாடலை பாடத் தொடங்கினார். அப்போது போலீஸ்காரர் ஒருவர் மேடையின் மீது எறி தன்னுடைய வாட்ச்சை காண்பித்து நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என்று கையசைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேடையை விட்டு இறங்கிய ஏ ஆர் ரகுமான்:

ஆனால், சில இசை கலைஞர்கள் அதை கவனிக்காமல் இசைத்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் கோபம் அடைந்த போலீஸ்காரர் இசை கலைஞர்களின் அருகில் சென்று உடனடியாக இசையை இசைப்பதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பயங்கரமாக சத்தம் போட்டு கூச்சலிட்டு இருக்கின்றனர். பின் ஏ ஆர் ரகுமான் போலீசாரின் வலியுறுத்தலுக்கு இணங்கி மேடையில் இருந்து இறங்கினார். பின் இது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

போலீஸ் கொடுத்த விளக்கம்:

இந்த நிலையில் சந்தோஷ் பாட்டில் என்ற அந்த போலீஸ் அதிகாரி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், ஒரு காவல் அதிகாரியாக நான் என்னுடைய வேலையைத்தான் செய்தேன். இரவு 10 மணிக்கு மேல் பொதுவெளியில் இசையை சத்தமாக ஒலிக்க விடக்கூடாது. இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. நான் முதலில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நபர்களை தான் அணுகினேன். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. அதன் பின் தான் நான் மேடையில் ஏறி ரகுமான் மற்றும் பிற இசை கலைஞர்களிடம் நிறுத்துமாறு கூறினேன். அனுமதி கொடுத்த நேரம் தவறியதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. இதனால் தான் நான் நிகழ்ச்சியை நிறுத்த சொன்னேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement