சிறு வயதில் முத்து ஜெயிலுக்கு போன காரணம் இதுதான் – உண்மையை போட்டுடைத்த சிறகடிக்க ஆசை ஹீரோ.

0
416
Muthu
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்து தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் ஏற்பாடு நடக்கிறது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

இதில் சுருதி- ரவியை தன் வீட்டிற்க்கே கொண்டு வர வேண்டும் என்று சுருதியின் அம்மா-அப்பா திட்டம் போடுகிறார்கள். ஒரு வழியாக ரோகிணி- ஸ்ருதி அம்மா விரித்த வலையில் முத்து விழவில்லை. எந்த பிரச்சனையும் இல்லாமல் பங்க்ஷன் முடிந்தது. பின் நேற்று எபிசோட்டில் மீனா, ஸ்ருதியின் நகையை திருடி விட்டாள் என்று மீனாவை மோசமாக பேசுகிறார் வாசுதேவன். பின் முத்து- ஸ்ருதின் அப்பாவிற்கு அடிதடி அளவிற்கு சண்டை செல்கிறது. இதனால் ஸ்ருதி-ரவி வீட்டிற்கு வர முடியாது என்று சொல்லி விடுகிறார்கள். இனிவரும் நாட்களில் முத்து-மினா வீட்டை விட்டு வெளியே செல்வார்களா? ஸ்ருதி- ரவி திரும்ப வீட்டிற்கு வருவார்களா? விஜயா என்ன செய்யப் போகிறார்? போன்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

வெற்றி வசந்த் குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை போட்டிருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்கு பின் இவர் நிறைய ஷார்ட் பிலிம்யில் நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரை நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்திருக்கிறது.

-விளம்பரம்-

வெற்றிவசந்த் பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் வெற்றி வசந்த் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், எனக்கு தெரிந்த நபர் மூலம் தான் எனக்கு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ஆடிஷன் ரூமுக்கு போகும்போது எனக்கு பயம் இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோருமே நல்லா ஹைட் வெயிட்டாக இருந்தார்கள். அதை பார்த்ததுமே கதாநாயகனுக்கு இவர்கள் தான் சரியாக இருப்பார்கள். எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தான் நினைத்தேன். ஆனால், கடைசியில் நான் தேர்வாகிவிட்டேன். அதற்கு பிறகு தான் சூட்டிங் போனேன். கதை சொன்னார்கள்.

சீரியலில் முத்து ஜெயிலுக்கு போக காரணம்:

அதில், நீதான் இந்த சீரியல் கதாநாயகன். இந்த சீரியலில் கதாநாயகன் கார் டிரைவர். அவருக்கு சிறுவயதில் ஒரு ஆக்சிடெண்ட் நடந்ததால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போய் வருகிறார். அதற்கு பிறகு அவருடைய அம்மா பாசம் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால், அப்பா ரொம்பவே பாசமாக இருக்கிறார். ஒரு அண்ணன் ஒரு தம்பி இருக்கிறார் என்றெல்லாம் கூறியிருந்தார். இந்த சீரியல் இந்தளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை என பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இதன் மூலம் ரசிகர்கள் பலரும் முத்து சிறுவயதில் ஜெயிலுக்குப் போக மனோஜ் தான் காரணமாக இருப்பார். அவர் செய்த தவறால்தான் முத்து ஜெயிலுக்குப் போயிருப்பார் என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement