பிகிலில் பணிபுரிந்த 400 கலைஞர்களுக்கு விஐய் கொடுத்துள்ள வித்யாசமான பரிசை பாருங்க.!

0
1785
Bigil
- Advertisement -

இளைய தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் அட்லியுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-
Image

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த வனத்தில் இருந்து வெளியேறின ‘சிங்க பெண்ணே’ பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலாக பரவியது. தற்போது இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தளபதி விஜய் படத்தில் பணிபுரிந்த 400 நபர்களுக்கு பிகில் படத்தின் நினைவாக ஒரு சிறப்பான பரிசை அளித்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தில் பணிபுரிந்த 400 கலைஞர்களுக்கு பிகில் என்றபெயர் பதியப்பட்ட ஒரு தங்க மோதிரம் ஒன்று வழங்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் கால்பந்தாட்ட அணியில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு விஜயின் கையொப்பத்துடன் இருக்கும் ஒரு கால்பந்து பந்தையும் பரிசாக அளித்துள்ளார். விஜய் விஜயின் இந்த செயலால் படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர் விடுவேன் உற்சாகப்படுத்தி உள்ளது.

Image
Image
Image

விஜய் இதுபோன்ற பரிசுகளை வழங்குவது ஒன்றும் புதிதான விஷயமல்ல,

-விளம்பரம்-

கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலும் பிரஸ்மீட் வைத்து ஊடக நண்பர்களுக்கு விஜய் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு சென்ற கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பிரஸ் மீட் வைத்து ஊடக நபர்களை நேரில் அழைத்து அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement