விடுதலை 2 படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விடுதலை. முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் நேற்று வெளியாகியிருக்கிறது.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன்,கென் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருந்தார். இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறார்.
விடுதலை 2 படம்:
மேலும், விடுதலை 2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். உலக அளவில் முதல் நாளில் மட்டுமே 7 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு விடுதலை படத்தின் முதல் பாகத்தின் முதல் நாளில் 3.5 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் அதைவிட இரண்டு மடங்கு வசூல் செய்து இருக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தான் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்படுகிறது. இந்த புழையில் விடுதலை 2 படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:
அதில் அவர், விடுதலை 2ல் சாதாரண பள்ளி வாத்தியாராக இருந்த பெருமாள் வாத்தியார் எப்படி போராளியாக மாறினார் என்பது தான் கதையே. விடுதலை மறக்க முடியாத படம். அதற்கு காரணம் கதையும் திரைக்கதையும் தான். படத்தில் வந்த கதாபாத்திரங்கள் எல்லாமே இப்பவும் நம் மனதில் இருக்கிறது. அந்த அளவுக்கு தரமாக அந்த கதாபாத்திரங்களை இயக்குனர் கொடுத்திருந்தார். அதே கதாபாத்திரங்கள் இந்த இரண்டாவது பாகத்திலும் வருகிறது. ஆனால், எதுவுமே மனதில் நிற்கவில்லை.
படம் குறித்து சொன்னது:
சூரி பத்தோடு பதினொன்னா தான் இந்த இரண்டாம் பாகத்தில் இருக்கிறார். படம் முழுக்க விஜய் சேதுபதி கதாபாத்திரம் காண்பித்து இருக்கிறார்கள். ஆனால், அவருடைய கதாபாத்திரம் வலுவாக எழுதப்படவில்லை. படம் முழுக்க கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். காதில் ரத்தம் வரும் அளவுக்கு கருத்து சொல்லி இருக்கிறார். விஜய் சேதுபதி எப்படி போராளியாக மாறினார் என்பதை சொல்வதற்கு 50 காட்சி வைத்திருக்கிறார்கள். மஞ்சு வாரியார் கதாபாத்திரம் படத்திற்கு தேவையே இல்லை. கதைக்காக தேவையான காட்சிகளை மட்டும் வைத்திருக்கலாம். ஆனால், படத்தில் நிறைய தேவையற்ற காட்சிகள் இருக்கிறது.
வெற்றிமாறன் குறித்து சொன்னது:
கதாநாயகியின் குடும்ப பின்னணி, கதாநாயகி காட்சி எல்லாம் தேவையே இல்லாத ஒன்று. முதல் பாகம் பிரம்மாண்டமாக நம்மை அசரவிக்கும் அளவுக்கு படம் தொடங்கும். ஆனால், இரண்டாம் பாகத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை ஓகே தான் சொல்லணும். கென் வரும் காட்சிகள் நமக்கு ஆறுதல் தருகிறது. வெற்றிமாறன் படம் என்றாலே சிறப்பாக இருக்கும். ஆனால், அவர் இயக்கத்திலேயே விடுதலை 2 ரொம்ப மோசமான படம் என்று தோன்றும் அளவுக்கு இருக்கிறது என்று கூறி இருக்கிறார். தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனம் தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.