மருமகனாக இருப்பதால் கிடைக்கும் சலுகை – தனது மாமியார் குறித்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.

0
1069
VigneshShivan
- Advertisement -

தன் மாமியார் வீட்டில் வைத்த விருந்து தொடர்பாக விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் போடா போடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தார். அதன் பின் இவர் தயாரிப்பில் வெளி வந்து இருந்த ராக்கி படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் பணிபுரிந்து இருந்தார்கள்.

- Advertisement -

விக்னேஷ் திரைப்பயணம்:

இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் என பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருந்தது. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகி இருந்தது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்:

ஆனால், இந்த படத்தின் கதை அஜித்திற்கும், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். தற்போது இவர் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் . இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த வகையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபல்லிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக நடந்தது.

-விளம்பரம்-

ஓணம் பண்டிகை புகைப்படம்:

பின் வாடகை தாய் மூலம் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர். இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் தான் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை தனது மகன்களுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் கொண்டாடி இருந்தார்கள். இந்த நிலையில் தங்களுடைய இரண்டு மகன்களுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் பதிவு:

இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உலகம், உயிர் உடன் முதல் ஓணம் பண்டிகை என்று பதிவிட்டு அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஓணம் பண்டிகை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தன்னுடைய மாமியார், அதாவது நயன்தாராவின் அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு தடபுடலாக விருந்து வைத்திருக்கிறார்கள். கொச்சின் ஃபேமஸான விருந்துகளை நயன்தாராவின் அம்மா, விக்னேஷிற்கு பரிமாறி இருக்கிறார்கள். தற்போது அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டு கொச்சினுக்கு உரிய விஷயங்கள். மாமியாரின் அன்பு மற்றும் மருமகனாக இருப்பதால் கிடைக்கும் சலுகைகள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement