நயன்தாராவிடம் இந்த விஷயத்தை மிஸ் செய்கிறாராம் – நயன் புகைப்படத்தை பதிவிட்டு உருகிய விக்னேஷ் சிவன்.

0
413
VigneshShivan
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன்- நயன்தாரா. விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா அவர்கள் சிம்பு, பிரபுதேவாவை காதலித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் நயன்தாரா மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும், இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி வெளிநாடு செல்வது அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போடுவது என்று காதல் புறாக்களாகவே இருக்கிறார்கள். நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இல்லாமல் செல்வதே இல்லை.

-விளம்பரம்-

அதோடு இவர்களைப் பற்றி ஏதாவது ஒரு நியூஸ் கிடைத்தால் போதும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரென்டிங் ஆகிவிடுவார்கள். மேலும், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் என பலரும் இவர்களுடைய திருமணம் குறித்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதோடு இவர்களின் திருமணம் பற்றி தான் ரசிகர்கள் பலரும் ஏதாவது ஒரு புரளியை சோசியல் மீடியாவில் கிளப்பி கொண்டு வருகிறார்கள். அதற்கு விக்னேஷ் சிவன் – நயன் இருவரும் பதிலளித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது. இதுகுறித்து விக்னேஷ் ஷுவன் கூறியது,

- Advertisement -

திருமணம் குறித்து விக்னேஷ் ஷுவன் கூறியது:

இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து இருக்கிறார்கள். ஆனாலும், நாங்கள் இருவரும் அவரவர் வேலையை பார்த்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது. அதனை முடித்த பின்னர் தான் திருமணம் என்று கூறி இருந்தார். இருந்தாலும் ரசிகர்கள் இதை விடுவதாக இல்லை. மேலும், கடந்த ஆண்டு நயன்தாரா-விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் மிகவும் privateஆக முடிந்தது. ஆனால், நிச்சயம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்கள்.

விக்னேஷ் ஷுவன்- நயன்தாரா படங்கள்:

மேலும், இவர்கள் இருவரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் இவர்கள் இயக்கத்தில் வெளிவந்த ராக்கி படம் நல்ல விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து காத்துவாக்குல 2 காதல் படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு பல படங்களில் கமிட்டாகி நயன் பிசியாக நடித்து வருகிறார். இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை.

-விளம்பரம்-

விக்னேஷ் ஷுவன்- நயன்தாரா சுற்றுலா பயணம்:

அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன் வெளிநாட்டில் கொண்டாடினார். இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவன் வருத்தத்தில் நயன்தாராவின் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதுஎன்னவென்றால்,

விக்னேஷ் ஷுவன் பதிவு:

விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் டிராவல் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு அவர் கூறியிருப்பது, வேலைகளை முடித்த பின் பெரிய விடுமுறை எடுக்க எடுக்கணும். நயன்தாராவுடன் பயணம் செய்வதை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிலர் இது உங்களின் திருமணத்திற்கான விடுமுறையா? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.

Advertisement