இசையமையாளராக ஆசைப்பட்டு காமெடி நடிகரான அல்வா வாசு – கடைசி வரை நிறைவேறாமல் போன அந்த ஒரு ஆசை.

0
553
- Advertisement -

கடைசி வரை கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த மறைந்த நடிகர் அல்வா வாசு குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தவர் அல்வா வாசு. இவர் மதுரை ஹார்விபட்டியை சேர்ந்தவர். இவர் எம் காம் படித்து முடித்து இருந்தார். இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தினமும் ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டவர். இருந்தாலும், சினிமாவின் மீது இவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவருக்கு கிட்டார் மீது அதிக ஆசை இருந்ததால் கிட்டார் வாசிக்கவும் பயின்றார். ஒரு கட்டத்தில் கிட்டார் அவருடைய விரல்களில் விளையாடியிருந்தது. இதனாலே மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வாசு எம் காம் படிக்கும்போது மியூசிக் என்றால் வாசு தான் என்று கல்லூரியில் கோரஸ் பாடும். அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் பிரபலமாக இருந்தார். இவருக்கு சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருந்தால் நண்பர்களும் நீ சினிமாவில் சாதிக்க முடியும் என்றெல்லாம் உற்சாகம் செய்திருந்தார்கள். பின் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற பல கனவுகளுடன் இவர் சென்னைக்கு வந்தார்.

- Advertisement -

கையில் கிட்டார் உடன் எல்லா தயாரிப்பாளர், இயக்குனர்களின் அலுவலகங்களுக்கு வாசு ஏரி இறங்கினார். வாய்ப்பு இல்லை என்று இவரை பலரும் வெளியே தள்ளியிருந்தார்கள். பலரும் இவரை விமர்சித்தும் பேசி இருந்தார்கள். சிலபேர் மட்டும் தான் அவருடைய இசை திறமையை புரிந்து வாசிப்பை ரசித்தார்கள். ஆனால், வாய்ப்பு தரவில்லை. இருந்தாலும் விடாமுயற்சியுடன் வாசு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று உறுதியாக நின்றார். அதற்கு பிறகு தான் மறைந்த இயக்குனர் மணிவண்ணிடம் உதவியாளராக வாசு சேர்ந்தார்.

இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்ற வாசுவின் கனவு படிப்படியாக இயக்குனராக மாற வேண்டும் என்று மாறியது. அதன் பிறகு கதைகளை எழுத ஆரம்பித்தார் வாசு. பின் வண்டி சக்கரம் என்ற படத்தில் ஒரு சீனில் மட்டும் நடிக்க வாசுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் மூலம் தான் இவர் நடிகர் ஆனார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது அமைதிப்படை படம் தான். மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை படத்தில் மயக்க மருந்து கலந்த அல்வா வாங்கி தரும் கதாபாத்திரத்தில் வாசு நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதனால் தான் இவரை பலரும் அல்வா வாசு என்று அழைத்தர்கள். அதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து அல்வா வாசு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார் குறிப்பாக, நடிகர் வடிவேலுவுடன் இணைந்து இவர் பல காமெடி காட்சிகளில் நடித்து பிரபலம் ஆகி இருந்தார். மேலும், இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த கிடாரிஸ்ட் , கதாசிரியர், துணை இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்டவர். இவர் இதுவரை 900 படங்களுக்கு மேல் நடித்திருந்தார்.

இதற்கிடையில் இவர் பல கதைகளை எழுதி வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் அலுவலகங்களும் ஏறி இறங்கினார். இருந்தாலும், அவருக்கான வாய்ப்பு யாரும் தரவில்லை. இப்படி இசையமைப்பாளராக வேண்டும் என்று மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து 36 வருடங்கள் இவர் சினிமாத்துறையில் கடுமையாக போராடி இருந்தார். இருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் தான் கிடைக்கவில்லை. பின் உடல் நிலை குறைவால் இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் இவர் தன்னுடைய சொந்த ஊருக்கே திரும்பி சென்று விட்டார்.

இவருக்கு கல்லீரல் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. கால்கள் மற்றும் கைகளிலும் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டிருந்தது, மூச்சு விடவும் ரொம்ப சிரமப்பட்டு இருந்தார். பின் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இருந்தும் சிகிச்சை பலனில்லாமல் வீட்டில் அல்வா வாசு தன்னுடைய 57 வயதில் காலமானார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் இருக்கிறார்கள். இவருடைய கனவுகள் நினைவாகாமல் 2017 ஆம் ஆண்டு மறைந்து விட்டார். இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலருமே இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.

Advertisement