நேற்று விளக்கேற்றியது பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கா? விக்னேஷ் சிவன் ஏற்பட்ட சந்தேகம்.

0
34410
- Advertisement -

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல்வேறு உலக நாடுகள் பாதிப்படைந்துள்ளது. உலகளவில் இந்த நோயால் கடந்த சில மணி நேரத்திற்க்கு முன்பாக வரை 12,76,117 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை உலகளவில் இந்த நோயினால் 69,509 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோயினால் இந்தியாவில் 4067 பேருக்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 109 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி கடந்த ஏப்ரில் 3 வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5ம் தேதி, அதாவது நேற்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு , அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறும், மொபைல் டார்ச் மூலம் கொரோனாவிற்கு எதிரான வெளிச்சத்தை காட்டுங்கள். உங்கள் வீட்டு வாசலில் இருந்தோ பால்கனியில் இருந்தவாறு இதை செய்யுங்கள்.

இதையும் பாருங்க : தனது ஹோட்டல்களில் பணிபுரியும் 350 ஊழியர்களுக்கு சூரி செய்துள்ள உதவி.

- Advertisement -

தெருவில் கூட்டமாக சேர வேண்டாம். வீட்டில் ஒளியேற்றும் போது சமூக விளைவுகளை கடைபிடியுங்கள். நாம் ஊரடங்கில் தான் இருக்கிறோமே தவிர, தனியாக இல்லை. ஒற்றுமையின் வலிமையை மக்கள் உணர வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் நேற்று 9 மணிக்கு 9 நிமிடங்கள் தீபம் ஏற்றி வைத்து மோடியின் வேண்டுகோளை நிறைவேற்றினர்.

மேலும், பொதுமக்களை போல பல்வேறு சினிமா பிரபலங்களும் நேற்று விளக்கேற்றி வைத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றினர்.இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் இந்நாள் காதலருமான விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா விளக்கேந்தி இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : தனது சேனலில் வனிதா வெளியிட்ட முதல் வீடியோ. அட இந்த குக்கு வித் ‘கோமாளி’ யும் இருக்காரே.

-விளம்பரம்-

மேலும், மற்றொரு பதவியில் நயனின் புகைப்படத்தை பதிவிட்டிருந்த விக்னேஷ் சிவன், அறிவியல் ரீதியாக பேசினால் விளக்கு ஏற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் உஷ்ணத்தால் வெப்பநிலை சற்று உயர்வதால் நாம் ஒரு சிலகொரோனா வைரஸை கொன்றுவிடுவோம் என்று சொல்வது உண்மையா என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால, இந்த பதிவிற்கு ரசிகர்கள் யாரும் கமன்ட் செய்யாமல் இருக்க கமன்ட் பகுதியை ஆப் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

Advertisement