விஜய்-அட்லீ படத்தின் ஃபஸ்ட் லுக் இந்த தேதியிலா?- கசிந்த தகவல், எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்.!

0
373
Vijay 63

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தவிர, கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வந்தது. இதற்கு முன் சென்னையில் நடைபெற்ற வெளிப்புறப் படப்பிடிப்புகளில் விஜய்யைப் பார்க்க திரளான ரசிகர் கூட்டம் கூடியதால் படப்பிடிப்பு நடத்த சிரமமாக இருந்ததாம். ரசிகர்கள் யார் சொன்னாலும் கலைந்து போகாமல் அங்கேய நிற்பதால் திட்டமிட்டபடி காட்சிகளை எடுக்க முடியவில்லை என்கிறார்கள்.

- Advertisement -


எனவே, இனி படமாக்க உள்ள காட்சிகளை சென்னையில் உள்ள பிரபலமான பெரிய ஸ்டுடியோக்களில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து காட்சிகளை படமாக்க முடிவெடுத்துள்ளார்களாம். கடந்த மாதம் கூட சென்னை நேப்பியர் பாலத்தை பிரசாத் ஸ்டுடியோவில் செட்டாக அமைத்து அதில் இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.

இது ஒரு புறம் இருக்க இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி பர்ஸ்ட் போஸ்டர் தயாராக இருக்கிறது என்றும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்டுகிறது. அதற்கு ஏற்றார் போல கல்பாத்தி ஐஸ்வர்யா கல்பாத்தி 11 புள்ளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரந்ததும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 11 ஆம் தேதி வெளியாகுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement