‘விஜய் 63’யில் விஜய் உடலை பார்த்து அனைவரும் மெய்சிலிர்ப்பார்கள்…!விஜய் டயட் பிளான்..!விஜய்யின் பயிற்சியாளர் பேட்டி..!

0
349

விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கவுள்ளனர்.

kanan

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை கடந்த செவ்வாய் கிழமை (நவம்பர் 13) நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகராபூர்வ அறிவிப்பை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது ஏ ஜி எஸ் நிறுவனம்.

இந்த படத்தில் நடிகர் விஜய் விளையாட்டு வீரராக நடிக்கவிருக்கிறார் என்றும், பெரும்பாலும் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்க உள்ளதாக நம்பகாரமான தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் விஜய்க்கு தனியாக கண்ணன் என்பவர் விஜய்க்கு பயிற்சிகளையும் துவங்க உள்ளனராம். கண்ணன் நடிகர்கள் கார்த்திக், சூர்யாவிற்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்யின் பயிற்சியாளர் கண்ணன் பேசுகையில்,நடிகர் விஜய்க்கு பயிற்சியாளரை நான் ஆகியுள்ளது மிக பெரிய பாக்கியம்.அவர் இப்போதே ஒரு அளவான நல்ல உடல் அமைப்பில் தான் இருக்கிறார். ஆனால், அவரை இன்னும் கொஞ்சோம் பெரிதாக, கட்டுமஸ்தான உடலில் இதுவரை யாரும் பார்த்தது இல்லை. இந்த படத்தில் ஒரு உண்மையான விளையாட்டு வீரர் எப்படி இருப்பாரோ அப்படியே அவரை காட்ட வேண்டும் என்பது தான் ஆசை. இந்த படத்தில் அவரது உடலை பார்த்து பலரும் வியக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.