இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். பெயரிடபடாதா இந்த படத்தை விஜய் 63 என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதமாக படப்பிடிப்பின் போது எடுக்கபட்ட சில புகைப்படங்களும் விடீயோக்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட விஜய் பேருந்து ஒன்றில் இருந்து இறங்குவது போன்ற ஒரு சிறிய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது.
இதையும் படியுங்க : சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிக்கும் சிம்பு.! ரசிகர்கள் குஷி.!
அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இருந்தார். தற்போது விளையாட்டு மைதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதில் விஜய் களத்திற்கு வெளியே கழுத்தில் காலர் பெல்ட் அணிந்து கொண்டு வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்த புகைப்படத்தின் மூலம் தற்போது அது உறுதியாகியுள்ளது.