விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Directing By @Atlee_dir
Music : @arrahman
Cinematography : @dop_gkvishnu
Under @agscinemas Production ?
Official Announcement at 4.30 pm pic.twitter.com/Qj8X9Yjeep
— Kollywood Updates (@KollyUpdates) November 14, 2018
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நாயகிகள் பற்றும் மற்ற நடிகர்களையும் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா அல்லது நயன்தாராவை விஜய்க்கு ஜோடியாக்க டிஸ்கஷன் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று (நவம்பர் 14) நடைபெற்றது. தற்போது இந்த படத்தை பற்றிய அதிகராபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏ ஜி எஸ் நிறுவனம்.
சமீபத்தில் ஏ ஜி எஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான தகவலின்படி இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்,மேலும்,நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் விவேக் விஜய்யின் இந்த படத்தில் நடிக்க உள்ளார். விவேக் மேலும், படத்தில் அனல் அரசு சண்டை காட்சிகளை அமைக்க உள்ளார்.