சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது விஜய், அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் போன்ற மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.
விஜய் 63 படத்திற்காக வின்னி மில்லில் தற்போது செட் அமைக்கபட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். மேலும், தினமும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோகளும், புகைப்படங்களும் வெளியான வண்ணம் இருக்கிறது.
இதையும் படியுங்க : இணையத்தில் வைரலாகும் விஜய் 63 படத்தின் பர்ஸ்ட் லுக்.! வெளியிட்டது யார் தெரியுமா.!
ரசிகர்களின் வருகையால் தினமும் படபிடிப்பு சற்று தாமதமாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் விஜய்யின் கெட் அப் தான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய்யின்கெட்டப் கசிந்து விடுமோ என்று படக்குழு குழப்பத்தில இருந்து வந்தனர்.
இந்நிலையில் தினமும் ரசிகர்களின் வருகை அதிகரித்து வருவதால் படப்பிடிப்பு இடத்தை தெலுங்கானாவில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு ஷிப்ட் ஆகலாமா என படக்குழு தீவிரமாக யோசித்து வருகிறதாம். இதனால் சென்னையில் உள்ள ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.