இணையத்தில் வைரலாகும் விஜய் 63 படத்தின் பர்ஸ்ட் லுக்.! வெளியிட்டது யார் தெரியுமா.!

0
1312
Vijay-63
- Advertisement -

சர்கார்’படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அதனால் ‘விஜய்63’ என அழைக்கப்பட்டு வருகிறது. ஏற்னெனவே அட்லி- விஜய் இருவரும் ‘தெறி’,‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றியை பெற்றன. அந்த வகையில் தற்போது ‘விஜய்63’படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜைகளும் துவங்கியது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்புகளுக்கான பணிகளும் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று இணையத்தில் சில புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

ஆனால் இது வெறும் ரசிகர்கள் உருவாக்கிய பேன் மேட் போஸ்டர் தான். படக்குழு சார்பில் இன்னும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த போஸ்டர் நல்ல வரவேப்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் கதிர், விவேக் , யோகி பாபு உள்ளிட்டோரும் நடிப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்ற தகவலும் கசிந்து உள்ளன.

-விளம்பரம்-
Advertisement