பாதுகாவலர்களின் பேச்சை கேட்காமல் ரசிகர்களுக்காக விஜய் செய்த செயல்.! இன்று இதான் வைரல்.!

0
903
vijay-63
- Advertisement -

சர்கார்’படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அதனால் ‘விஜய்63’ என அழைக்கப்பட்டு வருகிறது. ஏற்னெனவே அட்லி- விஜய் இருவரது கூட்டணியில் வெளியான இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது ‘விஜய்63’படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜைகளும் துவங்கியது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்புகளுக்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறது.

இதையும் படியுங்க : ‘விஜய் 63’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான விஜய்யின் வீடியோ.! 

- Advertisement -

தற்போது சென்னை வின்னி மில்லில் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.இதானால் அங்கே தினமும் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். நேற்று இரவு விஜயை பார்க்க ரசிகர்கள் பலரும் மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருந்தனர்.

கூட்ட நெரிசலில் இருந்து விஜயை தவிர்க்க பல பாதுகாவலர்கள் பணியில் இருந்தனர். இருப்பினும் பாதுகாவலர்களின் பேச்சை கேட்காமல் காரில் இருந்து இறங்கி தனது ரசிகர்களுக்கு கையசைத்து பின்னர் மீண்டும் காரில் ஏறி சென்றுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement