இளைய தளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவரின் நடிப்பில் ” தளபதி 64″என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார். மேலும், அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று படக்குழு அறிவித்திருந்தது.
இந்த படத்திற்கு அனிருத் இடையமைக்கிறார் மேலும், இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகர்களை பற்றிய விவரங்களை XB Film Creator நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : வேட்டையன் மற்றும் சரவணனை மட்டும் வைத்து கதை சொன்ன இயக்குனர். வேண்டாம் என்று மறுத்த சூப்பர் ஸ்டார்.
மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். தற்போது விஜய் 64 படத்தில் நடித்து வரும் இவருக்கு வைல்ட் லைப்பிலும் மிகுந்த ஆர்வமாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மசினகுடி, வயநாடு போன்ற பல்வேறு வன பகுதிக்கு சென்று இருக்கிறாராம்.
தற்போது ஆப்ரிக்கா காட்டில் வன விலங்குகளை பார்க்க சென்றுள்ள இவர் அங்கே மரத்தில் இருக்கும் சிங்கம் ஒன்றை 20 நிமிடம் நின்று ரசித்ததோடு அதனை தனது கேமரா மூலம் படம் பிடித்தாராம் மாளவிகா மோகனன். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மாளவிகா, தான் எடுத்த சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை கண்டு மாளவிகா மோகனின் புகைப்படம் எடுக்கும் கலையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.