வேட்டையன் மற்றும் சரவணனை மட்டும் வைத்து கதை சொன்ன இயக்குனர். வேண்டாம் என்று மறுத்த சூப்பர் ஸ்டார்.

0
19015
vettaiyan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த், விஜய் ,விஜயகாந்த், சூர்யா, அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல படம் இயக்கி உள்ளார். இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப் படம் தான் சந்திரமுகி. இந்த படத்தை வாசு அவர்கள் இயக்கினார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for chandramukhi

- Advertisement -

மேலும், இந்தப் படம் மிகப் பெரிய அளவு பிளாக் பஸ்டர் வெற்றியை அடைந்தது. ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் “வேட்டையன் என்கிற ராஜா கதாபாத்திரத்திலும், டாக்டர் சரவணன்” என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது குறித்து சமீபத்தில் நடந்த போட்டியில் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் ரஜினிகாந்திடம் தர்பார் படம் கதை சொல்வதற்கு முன்னாடி வேட்டையன் கதாபாத்திரத்தையும், சரவணன் என்ற கதாபாத்திரத்தையும்கூறி இருந்தேன்.

இதையும் பாருங்க :இப்படி இருந்தால் போதும். இரண்டாம் திருமணத்திற்கு பச்சை கொடி காண்பித்து விட்டாரா ரம்யா ?

அதற்கு ரஜினிகாந்த் அவர்கள் இந்த கதை உரிமையும் தயாரிப்பாளர், இயக்குனர் என்று வேற வேற நபர்களிடம் உள்ளது. அதனால் இந்த கதை எடுக்க பல பிரச்சனைகள் ஏற்படும் அதை விடுத்து தர்பார் படத்தை எடுக்கலாம் என்று கூறினார் சூப்பர் ஸ்டார். அதன் பின்னர் தான் ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படம் இயக்கினாராம். இந்த படத்திற்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் டாக்டர் சரவணன், வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தை வைத்து படம் எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும். இந்த தகவலை சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் ஏ ஆர் முருகதாஸ் அவர்களே கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Image result for Darbar

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து உள்ளார். ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

Advertisement