விஜய் 64 படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்.! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.!

0
1270
thalapthy-64
- Advertisement -

இளைய தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்க உள்ளதாக நம்பகரமான தகவல்ஏற்கனவே வெளியாகி இருந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

விஜய்யின் 64 வது படத்தை பிரிட்டோ கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சேவியர் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய், சேவியருடன் இருக்கும் புகைப்படமும் அனிருத், சேவியருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : வனிதாவே பயமா இருக்குன்னு சொல்லிட்டாங்கபா.! அப்படி என்ன நடந்துச்சு பாருங்க.! 

- Advertisement -

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 14) இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே நமது இணையத்தளத்தில் பதிவிட்டது போல இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் தான் இசையமைக்கிறார். மேலும், ஸேவியர் தான் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் பணிகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் கண்டிப்பாக அடுத்த ஆண்டு ஏப்ரில் மாதத்தில் இந்த படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தில் பணிபுரியும் மற்ற கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement